உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலகக் கூட்டரசு

203

அதிகாரங் களும் உரிமைகளும் குறையும். ஒரு மக்களாட்சிக் கூட்டரசின் நடுவணரசும் நாட்டரசும் போன்று, உலகப் பொது ஆட்சியும் உலக நாடாட்சியும் இருக்கும்.

உலகமுழுதும் நாடாட்சித் தேர்தல்கள் ஒரே சமையத்தில் நிகழும். அதன் பின், உலகாட்சித் தேர்தலும் ஒரே சமையத்தில் நிகழும்.

நாடாட்சிகளில்

காவல்துறையன்றிப் படைத்துறை யிராது. உலகாட்சி யமைப்பிலேயே மாபெரு வலிமையுள்ள முத்துறைப் படையிருக்கும். அது நெறிதவறும் நாட்டைத் தண்டிக்கப் பயன்படுத்தப்படும்.

போர் அடியோடு ஒழிக்கப்படும். ஆதலால். வல்லரசுகள் தேக்கி வைத்துள்ள பேரழிப்புப் படைக் கலங்களும் குண்டுகளும் அடியோடு அழிக்கப்படும்.

போர் ஒழிக்கப்பட்டு விடுவதால், கல்லூரிகளில் மாணவர் படைத்துறைப் பயிற்சியும் இராது. படைத்துறைப் பயிற்சி யிருக்கும்வரை, போர் மனப்பான்மையும் பகை யுணர்ச்சியும், சினவெழுச்சியும் இருந்துகொண்டே யிருக்கும். போர்க் குணங்கள் எத்துணைச் சிறந்தனவாயினும் பேயிகத் தின் பாற்பட்டனவே. ஒருவன் தன் மறத்தை, நற்கொள்கையைக் கடைப்பிடிப்பதிலும் ஒழுக்கத்தைப் பேணுவதிலும் துன்பத்தைப் பொறுத்தலிலும் பிறர்க்கு நன்மை செய்தலிலுமே காட்டல் வேண்டும்.

1. உலகாட்சியில் ஆங்கிலம் ஒன்றே ஆட்சிமொழியாயிருக்கும். 2. உலக முழுதும் ஒரே காசுத்திட்டமும் ஓரியல் அளவை வகைகளும் ஏற்படல்.

3. எல்லாப் பொருள்கட்கும் நேர்மையான விலை குறிக்கப் படலும் விலைவாசி யேற்றமின்மையும்.

4. ஏற்றுமதியும் இறக்குமதியும் இழப்பின்றியும் இடை யறாதும் நடைபெற ஏற்பாடு செய்யப்படுதல்.

5. நாடிழந்தவர்க்கு நாடும், வீடிழந்தவர்க்கு வீடும் திருப்பப்

படல்.

6. இனவெறி குலவெறி மதவெறி மொழிவெறி நாட்டுவெறி முதலிய எல்லா வெறிகளும் அடியோடு ஒழிக்கப்படுதல். ஊர்வெறியும் வட்டாரவெறியும் போன்றதே நாட்டு வெறியும். "யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்று உலக முழுவதையும் ஒரே நாடாகக் கொள்ளுதல் வேண்டும்.