உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

முடிவுரை

1. இந்தியாவின் முப்பெருங் கேடுகளை நீக்கல்

1. பிறவிக்குலப் பிரிவினை யொழிப்பு

இந்தியர் நல்வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் ஒற்று மைக்கும் வலுத்த முட்டுக்கட்டையிடுவதும் காந்தியடிக ளாலும் சவகர்லால் நேருவாலும் நீக்கமுடியாததும், இந்திய விடுதலை யைப் பொருளற்ற தாகச் செய்வதும், மருந்தில்லா மாபெருங் குமுகாயக் கொடுநோயாகத் தொடர்வதும், சிலர் கருதுவது போல், மதுவருந்தலன்று; பிறவிக் குலப்பிரிவி னையே. கடுகளவும் பொருத்தமின்றிப் பிறப்பாற் சிறப்பு வகுத்துக் குமுகாயத்தை நூற்றுக்கணக்கான குலங்களாகப் பிரிப்பதும், அவற்றையெல்லாம் படிமுறையேற்றத் தாழ்வு படுத்திப் பிராமணக் குலத்தை எல்லாவற்றிற்கும் மேலாக வைப்பதும், பிற குலங்களையெல்லாம் முன்னேற்ற மின்றிப் பிறப்புமுதல் இறப்புவரை அததற்குரிய ஒரே நிலையில் நிறுத்துவதும், ஆன இவ்வநாகரிக இழிதகவுக் குமுகாய வகுப்புத்திட்டம் இந்தியாவிற்கே சிறப்பாகும். இந்தி ந்தியா சப்பானைப் போன்று மேனாடுகளைப் பின்பற்றியேனும் இது வரை முன்னேறாமைக்கும், இன்றும் அங்ஙனம் முன்னேறும் நிலைமையிலின் மைக்கும், இதுவே கரணியமாயிருப்பதால், எவ்வகைச் சாக்குப் போக்குங் கூறிக் கடத்தி உடனடியாய் இதை அறவே ஒழித்தல் வேண்டும். இன்றேல், கூட்டுடைமையாட்சியில்தான் இஃதி யலும்.

வையாது

அயலார் ஆட்சியென்னும் ஆங்கிலராட்சியில்தான், தாழ்த்தப் பட்டவரின் நிலைமை திருந்தத் தொடங்கிற்று. ஆங்கிலர் நீங்கி 25 ஆண்டான பின்பும், வறுமையும் நீங்க வில்லை; தீண்டாமையும் ஒழியவில்லை. கூலி கூட்டிக்கேட்கும் ஏழை யுழைப்பாளியர் இன்றும் சுட்டும் எரித்தும்