உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




206

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

கொல்லப்படு கின்றனர். ஆங்கிலர் கால் நூற்றாண்டு முந்திச் சென்று விட்டனர் என்பதே நடுநிலையறிஞர் கருத்து.

2. வரலாற்று மறைப்பு நீக்கம்

ஆரியர் வருகைக்கு முற்பட்ட முதலிரு கழகத் தனித்தமிழ் நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. அவற்றிற்குப் பிற்பட்டனவும் பல இறந்துபட்டன. இன்றிருப்பவை யெல்லாம் மறுவிளைச்சல் (after-growth) போன்றவையே.

குமரிநாட்டுத் தமிழே திரவிட மொழிகட்கெல்லாம் தாயும் ஆரிய மொழிகட்கெல்லாம் மூலமும் ஆகும். இற்றைத் தமிழும் பரந்த பல்துறைப் பண்டை யிலக்கியத்தையும் பல்லாயிரக் கணக்கான சொற்களையும் இழந்தபின்பும், இயன்மையிலும் தூய்மையிலும் குமரித்தமிழைப் பெரிதும் ஒத்ததே. தென் மொழிக்கே சிறப்பான இலக்கணமும் இலக்கியமும் இன்றும் தமிழிலேயே உள்ளன. வேறெத் திரவிட மொழியிலும் இல்லை. ஆதலால், அரசியலமைப்பு முறையிற் காசுமீரத்திற்குத் தனிச்சலுகை காட்டியது போன்றே, மொழித் துறையில் தமிழ்நாட்டிற்குந் தனிச்சலுகை காட்டுதல் வேண்டும்.

கோவில் வழிபாடு தமிழில் நடைபெறுதல், ஆட்பெயர் ஊர்ப்பெயர் கட்டடப் பெயர் பொருட்பெயர் முதலியன தனித்தமிழ்ச் சொற்களாயிருத்தல், தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழே முதன்மொழியாகவும் தலைமை மொழி யாகவும் போற்றப்படல், ஆங்கிலப் பட்டம் பெற்றவரும் தமிழ்ப் பற்றுள்ளவருமான தமிழ்ப்புலவரே தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் துணை வேய்ந்தராக அமர்த்தப்பெறல், தமிழ் நாட்டு அரசு திணைக்களத் (Departmental) தலைவரும் வரலாற்றாசிரியரும் தொல்பொருளாய்வுத் தலைவரும் தமிழ்ப் பற்றாளராகவேயிருத்தல், சென்னையிலேனும் திருநெல்வேலி யிலேனும் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவித்தல், சமற் கிருதத்திற்கும் மூலமான தமிழின் வளர்ச்சிக்கு நடுவணரசால் ஒரு கோடி யுருபாவேனும் ஒதுக்கப்படல், உலகப் பல்கலைக் கழகங்களெல்லாவற்றிலும் தமிழ்ப் பேராசிரியப் பதவியேற் படல், ஒன்றிய நாட்டினங்களில் (UN) ஆண்டிற் கொருநாள் உலக முதன்மொழி நாள் என்னும் பெயரால் தமிழ்த்திருநாள் கொண் டாடப்படல், தமிழ்நாட்டு எதிர்கால ஆள்நரெல்லாம் இற்றை யாள்நர் பெருமாண்புமிகு கே.கே.சா போலத் தமிழ் கற்றவராகவும் தமிழ்ப் பற்றுடையா ராகவுமிருத்தல், எதிர்கால இந்தியக் குடியரசு தலைவர்க்கும் தலைமை