உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




208

ளது

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

மேலையாரியரின் முன்னோரான திரவிடர் முதன் முதல் ஐரோப்பாவின் வடமேற் பாகத்தையடைந்தத னால், அங்குத் தமிழ்ச்சொற்கள் பெரிதுந் திரியாமற் போற்றப்பட்டு வந்திருக்கின்றன என அறிக.

இவற்றையாரிய மொழிகளுள், மேலைக் கோடியிலுள் ஆங்கிலம்; கீழைக்கோடியில்

உள்ளது

இலக்கிய மொழியான சமற்கிருதம். சமற்கிருதத்திற்குத் தமிழ் மூலம் என்னும் உண்மை முன்னரே காட்டப்பட்டுவிட்டது.

தமிழ் ஆரியத்திற்கு மூலமென்பது ஐயுறப்படின், உலகப் பட்டிமன்றம் ஒன்றில் அது ஐயந்திரிபற நாட்டப்படும். தமிழ் வடமொழிப் பிணிப்பினின்று மீட்கப்பட்டாலொழியத் தமிழ் வாழ்வுமில்லை; தமிழன் வாழ்வுமில்லை.

என்பது,

தமிழ் தென்னாட்டுப் பழங்குடி மக்கள் சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவரா யிருந்த (P.T.) சீநிவாசையங்காராலும் (V.R.) இராமச்சந்திர தீட்சிதராலும் மறுக்க முடியாத நூல்வாயிலாக நிறுவப்பட்ட பின்பும், அவ் வுண்மையைச் சில தமிழ்ப் பகைவர் மறைத்து வரு கின்றனர். இதற்குச் சென்னைப் பல்கலைக்கழகமும் உடந்தை யாகவுள்ளது.

ஆங்கிலராட்சி ஏற்படும்வரை இந்தியா ஒருகாலும் ஓராட்சி நாடாக இருந்ததில்லை. 1857-ல் கிளர்ந்த வடநாட்டுப் பொருநர் கலகம் (Sepoy Mutiny), தில்லி முகலாய அரசரும் குவாலியர் அரசியும் மராத்தியப் பீசுவாவும் (Peshwa) தூண்டி விட்ட அரசியற் போரேயன்றித் தேசியப் போராட்டமன்று.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழும்பார் (East India Company) வணிகஞ் செய்ய வந்தவரேயன்றி, நாடுகவரப் படையெடுத்து வந்தவரல்லர். அக்காலத்துச் சூழ்நிலைகள் அவரைப் படிப்படி யாக இந்திய அரசராக்கிவிட்டன. முதற்கண், அவரைத் தாக்கின சிற்றரசுகள் தோல்வியுற்றுக் கொடுத்த தண்டத்தினாலும், அவரது (ஆங்கிலரது) உதவிபெற்றுப் போரில் வென்ற அரசுகள் கொடுத்த நன்கொடையினாலும், சில நிலப்பகுதிகளைப் பெற்றனர். பின்னர், காப்புதவி யொப்பந்தம் (Subsidiary Alliance), பிறங்கடையின்றி அரசிழப்பு (Doctrine of Lapse), ஊழலாட்சி நாட்டைக் கவர்தல் (Annexation of Mis-ruled States), போர் வெற்றி முதலிய வழிகளால் இந்தியாவில் 1/3 பங்கை அடைந்து விட்டனர்.