உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




210

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

தருகின்றது. ஆலன் ஆகத்தேவியன் கியூம் (Allan Octavian Hume) பேராயத்தின் தந்தையென யாம் அறிகின்றேம்." -பேராய வரலாறு (The History of the Congress), ப. 30.

வரலாறென்பது முழுத்தூய்மையான மறைநூல். மதத் தொடர்பான மறைநூல்கள் சிறிதும் பெரிதும் மாற்றியெழுதப் படலாம். ஆயின், வரலாற்றை எல்லாம்வல்ல இறைவனும் ஓரெழுத்தும் மாற்ற இயலாது; மாற்றின் பொய்யனாகி இறைமையிழந்துவிடுவான். ஆதலால், தெய்வ அச்சமுள்ள நடுநிலையாளரே வரலாற்றை வரைதல் வேண்டும்.

3. இந்திய ஆட்சிமொழித்திட்டம்

குடியரசு தலைவர், தலைமை மந்திரியார், தலைமைத் தீர்ப்பாளர் உட்பட இக்காலக் கற்றோரெல்லாம், ஆங்கிலக் கல்வியால் அறிவடைந்தவரே. அவ்வறிவையகற்றும் வழி யிருந்து அகற்றின், அவர் கல்வித்தொழில் ஒன்றிற்கும் உதவார். அவ் வழியின்மையால், பெற்றோரை மறுப்பவரும், செய் நன்றி கொல்பவரும் தேர்தலில் வெற்றிபெற்றபின் கட்சிமாறுபவரும் போல், ஆங்கிலக் கல்வியை நீக்கவும், அதனால் எதிர்கால இந்தியரை, சிறப்பாகத் தென்னிந்தியரைக் கெடுக்கவும் துணிகின்றனர்.

இந்திய ஆட்சிமொழித் திட்டம் கீழ்வருமாறு இரண்டில் ஒன்றாகத்தான் இருத்தல் கூடும்:

1)ஆங்கிலம் ஒன்றே நிலையான இந்தியப் பொதுமொழி;

அல்லது,

2)ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மூன்றும் இந்தியப் பொது மொழிகள்.

பொதுமொழி மூன்றாயின், நடுவணரசு மூன்றிலும் நடைபெறல் வேண்டும். உறுப்புநாடுகட்கு அம் மூன்றுள் ஏதேனும் ஒன்றைத் தெரிந்துகொள்ள முழுவுரிமை வேண்டும். இவ் விரண்டில் ஒன்று நடைபெறாக்கால், இந்தியருள் ஒற்றுமை யிராது. அதனால் இந்தியா என்றும் ஒரு நாடாயிராது. இந்திவெறியர் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிப்பின், அது அயலாட்சியும் (Xenocracy), கொடுங் கோலாட்சியும் (Despotism), தன்மூப்பாட்சியும் (Dictatorship) ஆகவே கருதப்படும். தமிழ்நாடு ஆங்கிலத்தையே ஏற்கும்.

உலகப் பொதுமொழி யமைப்பு முயற்சி

மொழி மக்களினந்தொறும் வேறுபட்டிருப்பதனாலும், பல்வேறு நாட்டின மக்கள் ஒன்றுகூடும்போது எல்லார்க்கும்