உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடிவுரை

211

விளங்குமாறு பேசத்தக்க பொதுமொழியொன்றின்மை யாலும், சென்ற (19ஆம்) நூற்றாண்டில் ஐரோப்பிய மொழியறிஞர் பலர் பல செயற்கைப் பொதுமொழிகளை ஒன்றன்பின் ஒன்றாக உண்டுபண்ணிப் பார்த்தனர். அவை, வாலப்புக்கு (Volapuk), எசுப்பெரேன்றோ (Esperanto), முண்டலிங்குவெ (Mundalingue), இடியம் நியூட்டிரல் (IdiomNeutral), இடோ (Ido), எசுப்பெ ரேன்றிடோ (Esperantido), இன்றெர்லிங்குவா (Interlingua), நோவியல் (Novial) முதலியன.

அவற்றுள் ஒவ்வொன்றிலும் பல்வேறு குறைகள் இருந்ததனாலும், அவற்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வர்கள் பெரும்பாலும் ஆங்கில அமெரிக்கரல்லாது ஐரோப்பி யராகவேயிருந்தமையாலும், ஆங்கிலம் ஆங்கிலராட்சியால் உலகமுழுதும் பரவிவிட்டமையாலும், அது இலத்தீன் செரு மானியம் முதலிய ஐரோப்பிய மொழிகளினும் எளிமையாக அமைந்திருத்தலாலும், அதுவே உலகப் பொதுமொழியாதல் சாலுமென ஒருவாறு குறிப்பாக ஒப்புக்கொள்ளப்பட்டு. ஒரு செயற்கைப் புதுப் பொதுமொழிப்புனைவு முயற்சி முற்றுங் கைவிடப்பட்டுவிட்டது.

ஆகவே எதிர்காலவுலகில், புதுமொழி வகையில் ஆங்கி லமும் முதுமொழி வகையில் தமிழுமே உலகப் பொதுமொழி களாக வளர்ந்தோங்குமென அறிக. உலகப் பொதுமொழியே இந்தியப் பொதுமொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருத்தல் வேண்டும்.

2.வள்ளுவர் கூட்டுடைமை

செல்வஞ் சேரும் வழிகள்

நல்லவை: பெருமுயற்சி அல்லது பேருழைப்பு, வணிகம், புதையல், முன்னோர் தேட்டு (முதுசொம்), பிறர் சாவு, திருமணவரிசை, பெரும்பதவி, அம்பகம் (Permit), புதுப்புனைவு (Invention) அல்லது புத்தமைப்பு, பரிசு, நன்கொடை, மதிநுட்பம், கட்டழகு, மதவலிமை (Samsonhood).

தீயவை: களவு, கொள்ளை, கையூட்டு, சூதாட்டு, வஞ்சனை, கொலை, கள்ளக்காசடிப்பு, கள்ளக்கடத்தம், கள்ள வாணிகம், காட்டிக் கொடுப்பு, பரத்தைமை.

இவ் விருவகை வழிகளுள்ளும் தலைசிறந்தது பெரு முயற்சியொன்றே. பிறவெல்லாம் பெரும்பாலும் தன்னேர்ச்சி