உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடிவுரை

223

மொழிபெயர்க்க வேண்டியிருப்பதனாலும், தனிப்பட்ட புலவரும் மாணவர் குழாங்களும் அறிஞர் குழுக்களும் ஒரு பொருட்கு வெவ்வேறு சொல்லை ஆக்கி வழங்குவதனாலும்; அவற்றுள் எதை ஆள்வதென்று தெரியாது பொது மக்கள் மயங்குவதனாலும், ஏற்கெனவே அரசினால் அமர்த்தப்பட்ட மொழிபெயர்ப்புக் குழு ஒரு துறைக்கே சிறப்பாகவுரிய தாயிருப்பதனாலும், தமிழ்வளர்ச்சிக்கு இன்றியமையாத பொதுச் சொற்களை யெல்லாம் அவ்வப்போது புனைந்து வழக்காற்றுப் படுத்தற்குப் பலதுறை யறிஞரைக் கொண்ட ஒரு நிலையான சொல்லாக்கக் குழுவை அரசு ஏற்படுத்துவது நன்றாகும்.

தமிழின் தலைமையை ஒப்புக்கொள்ளல்

ஒரு

வடமொழி வஞ்சனையால் தமிழின் அரியணையைக் கவர்ந்துள்ளது. அவ் வன்கவர்வு மூவாயிரம் ஆண்டு தொடர் ந்து விட்டதனாற் சட்டமுறை வலிமை பெற்று விடாது. நீண்ட நாட்பட்ட நோயானாலும் நீக்கியே தீரவேண்டும். நாட்டிலுள்ள வந்தேறிகள் நாகரிகரான பழங்குடி மக்களைப் பின்பற்றியே வாழ்தல் வேண்டும்; தாம் நிலத்தேவரென்று, பெயக்கண்டும் நஞ்சுண்டமையும் நயத்தக்க நாகரிகம் வேண்டும் தமிழ்மக்களை ஏமாற்றித் தாழ்த்தியதொடு தமிழையுங் கெடுப்பது, உய்தியில்லாச் செய்திக்கொலையாகும் (When you are at Rome do as Rome does).

என்றைக்கும் எல்லாரையும் ஏமாற்றமுடியாது(Cheating play never thrives). வந்தாரை வாழ்வித்து இருந்தாரை இறப்பிக்கும் தமிழர் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. அவ் வெல்லை கடந்துவிட்டது. எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேற் படும் (Oil and truth will get uppermost at last.). ஆதலால், தமிழின் தலைமையைத் தமிழ்நாட்டரசு மட்டுமன்றி நடுவணரசும் ஒப்புக்கொள்ளல் வேண்டும். தமிழ் மீண்டும் அரியணையேறி, தமிழர் தமிழரல்லாதார் என்னும் வேறுபாடின்றித் தமிழ் நாட்டாரெல்லாரும் ஒருமித்து வாழ்தல் வேண்டும்.

தமிழ்ப்புலவர் பொறுப்பு

தமிழைக் காப்பது தமிழ்நாட்டரசின் தனிக்கடமை. அது அக் கடமை தவறின், நக்கீரரும், மறைமலையடிகளும், சோம சுந்தர பாரதியாரும், இலக்குவனாரும்போல் தமிழைப் போற்றிக் காப்பது இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் தலைமேல் விழுந்த தலையாய கடமையாம்.

மேலையாரியர் தமிழ்ச்சொற்களை ஆண்டவாறே நாமும் ஆள வேண்டுமென்றும், சொல்லாக்கத்தில் அவர் கையாண்ட