உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




222

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

மொழிபெயர்த்தது. குடிமதிப்பு என்னுஞ் சொல் ஏற்கெனவே உள்ளது. அதுவே போதும். Collector என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் என்பதும் வட்ட வழிச் சொல்லே. தண்டலாளர் என்பதே தக்கதாம்.

-

ஒரு சில குறியீடுகளை ஒலியொத்த வகையிலும் மொழி பெயர்க்கலாம். எ-டு: parliament பாராளுமன்று, bracket பிறைக்கோடு.

-

மொழிகள் செடிகொடிகளைப்போல விரைவளரிக ளல்ல; மரங்களைப்போல் மெல்ல வளரிகள். ஆங்கிலம் தொடக்கந் தொட்டு 15 நூற்றாண்டுகளாக வளர்ந்து வருகின் றது. சமற்கிருதம் என்னும் இலக்கிய மொழி கடந்த மூவாயிரம் ஆண்டாக வளர்ந்து வருகின்றது. ஆரியர் தென்னாடு வந்தபின் தமிழ் வளர்ச்சி தடைப்படுத்தப்பட்டு விட்டது. அதோடு ஆயிரக்கணக்கான சொற்கள் மறைந்தும் வழக்கு வீழ்த்தப் பட்டும் போயின. ஆயினும் அறிவியற் குறியீடுகளை மொழி பெயர்க்கப் போதிய கருவிச் சொற்கள் இன்றும் உள்ளன. பொறுமை மட்டும் வேண்டும். இற்றைத் தமிழ்வளர்ச்சி ஆங்கிலராட்சியால் சென்ற நூற்றாண்டே தொடங்கிற்று. மறைமலையடிகளின் மாட்சிமிகு தொண்டினால் அது மாபெரு வேகம் பெற்றது. மொழிபெயர்ப்பு செயற்கை யாயிராது இயற்கையாயிருத்தல் வேண்டும்.

எ-டு:

இயற்கை

cycle - மிதிவண்டி

funnel - வைத்தூற்றி

செயற்கை இருசக்கர வண்டி விரிவாய்க்குழல்

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியின் 12ஆம் மடலம் ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் நெறிமுறைகள்' (Principles of Tamil Etymology) அது புதுச் சொல்லாக்க முறைகளையும் மொழிபெயர்ப்பு முறைகளையும் தெள்ளத்தெளிவாகக் காட்டும். அதைப் பின்பற்றி எல்லாச் சொற்களையும் எளிதாய் மொழி பெயர்க்கலாம். அதுவரை பதற்றமும் பரபரப்புமின்றிப் பொறுமையாயிருப்பது நன்று. “பதறாத கருமம் சிதறாது” பதறிச் செய்யும் கருமம் சிதறிக் கெட்டுப்போகும். குறுங்கால வளரிகள் குறுவாழிகளாகவும் நெடுங்கால வளரிகள் நீடுவாழிகளாகவும் இருக்கும்.

சொல்லாக்கக் குழு

தமிழ் தூய்மையை உயிர்நாடியாகக் கொண்டிருப்ப தனாலும், மேன்மேலும் பல அயற்சொற்களை இடைவிடாது