உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

7

தோற்றப் புதிர்’ (Problem of Dravidian Origins) என்னுங் கட்டுரைத் தொடரிற் கூறியிருப்பது, தமிழ் வரலாற்றையும் குமரிநில வூர்ப்பெயர் மரபையும் அவர் அறியாமையையே காட்டும்.

குடியிருப்புத்தலைவர்,

குறிஞ்சிநிலத்தில் மலையின்

பெயராற் சிலம்பன், பொருப்பன், வெற்பன் என்றும்; முல்லை நிலத்தில் அண்ணல், தோன்றல் என்றும்; பாலைநிலத்தில் விடலை, காளை, மீளி என்றும்; மருதநிலத்தில் ஊரன், கிழவன், மகிழ்நன் என்றும்; நெய்தல் நிலத்தில் துறைவன், கொண்கன், சேர்ப்பன் என்றும் பெயர் பெற்றனர்.

பழையவும் புதியவுமான சிறுகுடியிருப்புகள், அண்மை யிலுள்ள பெருங்குடியிருப்புத் தலைவன் ஆட்சிக்குட்பட்டன. மாந்தரும் பழந்

முதற்கால நண்ணிலக் கடற்கரை திரவிடருள் ஒரு சாராரும், நீள்மண்டையராகவும் (dolicho cephalic) ஒத்த தற்கால நாகரிகத்தினராகவும் இருந்தாரென்பது, நாகரிகத் தொடக்க நிலையிலிருந்த ஒருசார் மாந்தர் குமரிநாட்டினின்று மேலை யாசியாவிற்கும் வடஆப்பிரிக்காவிற் கும் சென்றனர் என்பதையே உணர்த்தும்.

மேலும், ஒரே காலத்தில் தொடக்க நாகரிகரும் நடுத்திற நாகரிகரும் முதிர்ந்த நாகரிகரும் இருந்ததாகத் தெரிவதால், பழந்தமிழரையெல்லாம் வெளிநாட்டுத் தொடக்க நாகரிக ரொடு ஒப்பித்தல் தவறாகும்.

இலேகோவாரி (Lahovari) பல மேலையாசிய மொழிச் சொற்கட்கும் தமிழ்ச்சொற்கட்கும் உள்ள ஒருமருங்கு ஒலியொப்புமையைக் கண்டாரேயன்றி, அச் சொற்களின் வேரையும் வரலாற்றையும், அறிந்தாரல்லர். மேலையாசி யாவிலும் ஐரோப்பாவிலும் வழங்கும் பல இடப்பெயர்கள் தமிழ்ச்சொற் களின் திரிபாயிருப்பது, தமிழர் இங்கிருந்து அங்குச் சென்றார் என்பதையே மெய்ப்பிக்கும்.

ஐவகையரசர்

மருதநில மக்கள் நிலையாகக் குடியிருந்ததனால், வரவர ஊர் மக்கட்டொகை பெருகிற்று. பல சிற்றூர்கள் பேரூர் களாயின. பேரூர்கள் மூதூர்களாயின. குறிஞ்சி முல்லை நெய்தல் நில மக்கள் தத்தம் நில விளைபொருள்களை மருத நிலத்தூர்கட்குக் கொண்டுவந்து, நெல்லிற்கு மாறினர்.