உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

உழவர்க்குப் பக்கத் துணையாகப் பதினெண் தொழில் வகுப்பார் தோன்றினர். இதனால் மக்கட் பெருக்கமும் திணைமயக்கமும் காவல் தேவையும் ஏற்பட்டன. எல்லா வகுப்பாரின் பொருள் களைப் பாதுகாக்கவும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்து அமைதியை யை நிலைநாட்டவும், அரசு தோன்றிற்று. இங்ஙனம் மருதநில நகர்களில் நாகரிகந் தோன்றி வளர்ந்தது. மருதநிலக் கிழவன் ஊராளி என்னும் முதலரசனானான்.

அதிகார ஆசைபற்றியும் ஈரூர்க் குடிகளின் சச்சரவுபற்றியும் அடிக்கடி போர் எழுந்தது. அதனால் நிலையான படையமைக்க வேண்டியதாயிற்று. செம்மையாக ஆட்சி செய்யவும் வெற்றி யாகப் போர்முடிக்கவும் சூழ்ச்சித்துணையும் வேண்டியிருந்த தனால், அறிவாற்றல் மிக்க அமைச்சனும் அமர்த்தப்பட்டான்.

போரில் தோற்ற அரசு வென்ற அரசிற்குப் பெரும்பாலும் கீழ்ப் படுத்தப்பட்டதனால், முதற்கண் ஒரே பேரூர்த் தலை வனான கிழவன் நிலையிருந்த ஊராளி அரசு, படிப்படியாக, பல பேரூர்த் தலைவனான வேள் நிலையும், பல வேளிர் தலை வனான மன்னன் நிலையும், பல மன்னர் தலைவனான கோ நிலையும் பல கோக்கள் தலைவனான வேந்தன் நிலையும் அடைந்தது. மன்னரைப் பெருவேளிர் என்பதுமுண்டு.

கிழவனாட்சி பெரும்பாலும் ஒரே திணைநிலத்தையும், வேள் மன்னர் கோவாட்சி ரு அல்லது முத்திணை நிலங்களையும் தழுவின; வேந்தனாட்சி ஐந்திணை நிலங் களையுந் தன்னுளடக்கிற்று.

2. பண்டைத் தமிழக ஆட்சிமுறை

(தோரா. கி.மு. 10,000 - 1,500)

ஒரு காலத்தில் தெற்கிற் குமரிமலையிலிருந்து வடக்கிற் பனிமலைவரை பரவியிருந்த கண்டமே, பழந் தமிழகம். இற்றைக் குமரி முனைக்குத் தெற்கில் ஆப்பிரிக்க ஆத்திரேலியத் தென்முனை மட்டம்வரை நீண்டிருந்த நிலப்பரப்பு முழுதும், தமிழன்றி வேறொரு மொழியும் வழங்காத முதற்காலப் பாண்டி நாடு. நெல்லை மதுரை முகவை மாவட்டப் பரப்பான பிற்காலப் பாண்டிநாடு, கடல்கோளுக்குத் தப்பிய பாண்டிய வேந்தன் தன் குடிகட்காகச் சோழநாட்டினின்றும் சேரநாட்