உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

15

அரசன் தன் அமைச்சரொடு கலந்து சூழ்ந்து ஒரு பெரு வினையை மேற்கொள்வதே வழக்கமாயினும், தான் நல்ல தென்று கண்டதை அல்லது அல்லது கொண்டதை கொண்டதை நிறைவேற்றும் முழு அதிகாரமும் அவன் கையிலிருந்தது. பொதுவாக, அமைச்சரின் துணையை நாடுவது, அரசனின் மதிவலிமையையும் மேற் கொண்ட வினை வலிமையையும் பொறுத்தேயிருந்தது.

கருணாகரத் தொண்டைமான் போலும் படைத்தலைவ னில்லா விடத்து, அரசனே போர்க்களத்திற்குச் சென்று பொருததனால், அவன் நாற்படை நாயகமாகவும் நிலப்படை, கலப்படை ஆகிய ஈரிடப் படை மேலோனாகவு மிருந்தான்.

அரசப்பதவியுரிமை மரபுவழியாக மூத்த மகனுக்கு இருந்து

வந்தது.

1. பாதுகாப்பு

3. அரசின் பயன்

நாடு எத்துணை வளங்கொழிப்பினும் மக்கள் எத்துணைப் பொருளீட்டினும், அரசன் பாதுகாப்பில்லாவிடின் அனைத்தும் கள்வர்க்கும் கொள்ளைக்காரருக்குமே உரிமையாம். விளைத்தது வீடு வந்து சேராது; ஆக்கினதை அருந்த முடியாது; கைக்கெட் டினது வாய்க்கெட்டாது; வாய்க்கெட்டினது வயிற்றிற்கெட் டாது; கட்டின வீட்டிற் குடியிருக்கவும் காதன் மனைவியொடு கூடிவாழவும் இயலாது. கவர்வோரை யெதிர்ப்பின் உடைமை யும் போம்; உயிரும் போம். அரசுள்ள காலத்தில் நல்லவராயிருப் பவரும் அரசில்லாக் காலத்தில் தீயவராவர். ஆதலால், அரசின் முதற் பெரும்பயன் பாதுகாப்பே. அதனாலேயே, அரசனுக்குக் காவலன் என்றும், புரவலன் என்றும் பெயர். அரசனே கண்கண்ட தெய்வம்.

66

'வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி.

99

(குறள்.542)

66

'ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமை வில்லாத நாடு.

(குறள்.740)

'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்(கு)

இறையென்று வைக்கப் படும்.

""

(குறள்.388)

"நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்

அதனால், யானுயிர் என்ப தறிகை

வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.

(புறம்.186)