உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

2. ஒழுக்க வுயர்வு

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

தாமாக உயர்ந்த ஒழுக்கம் பூண்போர் ஒருசிலரான சான்றோரே. ஏனையோரெல்லாம் அரசனின் தண்டனைக் கஞ்சியே ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவராவர்.

"அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது."

3. அமைதி நிலைப்பு

குற்றஞ் செய்யுங் குடிகளைத்

(குறள்.1065)

தண்டிப்பதனாலும்,

வல்லரசனுக்கு அடங்கியும் மெல்லரசனை அடக்கியும் அல்லது நட்பாகக் கொண்டும் ஆள்வதனாலும், நாட்டில் அமைதி யுண்டாகும்.

4. தொழிலொழுங்கு

பொருள் வருவாய்க்கேற்ற வழிகளை வகுத்தலும், அவ் வழிகளிற் பொருள் தேடுதலும் தேடின பொருள்களைக் காத்தலும் காத்த பொருள்களைப் பங்கீடு செய்தலும் அரசன் செயல்களாகும்.

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு.

5. செல்வ வளர்ச்சி

""

குறள்.385)

நெடுஞ்சாலைகளமைத்து நிலவாணிகமும், துறைமுகங்கள் கட்டி நீர்வாணிகமும் வளர்த்து நாட்டின் செல்வத்தைப் பெருக்குவது, அரசால் அல்லது அரசனால் ஆவதே.

6. மக்கள் முன்னேற்றம்

இலவசக் கட்டாயத் தொடக்கக் கல்வியைப் புகுத்தியும், பாவலரையும் பேரறிஞரையும் புதுப்புனைவாளரையும் பொதுநலத் தொண்டரையும் பட்டம் பதவி பரிசுகளால் ஊக்கியும், பொதுமக்கள் வாழ்க்கைநிலையை யுயர்த்தியும், பசி பிணி வறுமையைப் போக்கியும், மக்களை முன்னேற்றுவது அரசன் கடமையாகும்.

7. உற்றிடத்துதவி

நொடித்த குடும்பங்களைத் தூக்கியெடுப்பதும், தொழில் முடக்கம், பஞ்சம், கொள்ளைநோய், வெள்ளச்சேதம், நில