உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

17

நடுக்கம், எரிமலை முதலிய துன்பக்காலங்களில் தொல்லை நீக்கு வதும், அரசன் செய்யும் உற்றிடத்துதவியாகும்.

8. அயல்நாட்டுறவு

வெளிநாட்டு வணிகத்திற்கும் மேற்கல்விக்கும் கடுநோய் மருத்துவத்திற்கும் இயற்கைச் சேதக்காலத்தில் உதவி பெறு தற்கும், அயல்நாடுகளின் உறவு இன்றியமையாததாகும். அதற்குத் தூது போக்கி ஏற்பாடு செய்பவன் அரசனே.

در

"அரச னில்லாவூர் அச்சில்லாத் தேர்."

"அரசனில்லாத நாடு அகமுடையான் இல்லாத வீடு." 'அரசன்வழிப் பட்டது அகலிடம் (அவனி).

4. அரசியல் வளர்ச்சி வரலாறு

1. கிரேக்க அரசு (கி.மு. 5ஆம் நூற்.)

""

நகரநாடு (City - State), தேய நாடு (Country - State), கூட்டு நாடு (Federal State) என நாடு மூவகைப்படும்.

கிரேக்க நாட்டில் முதற்கண் நகரநாடுகளாகவே (City - States) அரசகங்கள் தோன்றின. ஒரு நகரநாடு பல சிற்றூர்க் கூட்டாகவோ, சில சிற்றூர்கள் சூழ்ந்த ஒரு பேரூராகவோ இருந்தது. பார்த்தா (Sparta) என்னும் நகரநாடு ஐஞ்சிற்றூர்க் கூட்டாக அமைந்தது.

நகரநாட்டின் அரசு முதற்கண் கோவரசாக (Monarchy) இருந்தது. அது நாளடைவில் தன்விருப்பாட்சியாகவும் தன்மூப்பாட்சியாகவும் மாறினதனால்,பெருமக்களாட்சியான சீரியோராட்சி (Aristocracy) எழுந்தது. சீரியோராட்சியும் முன்பு சில்லோராட்சியாகவும் (Oligarchy) பின்பு கொடுங்கோலாட்சி யாகவும் (Tyranny) சீர்கெட்டு விட்டதனால், மக்களாட்சியும் (Republic) குடியரசும் (Democracy) தோன்றின.

ஏதென்சு (Athens) நகரநாட்டு அரசியலமைப்பு

i) பேரவை The Assembly (Ecclesia)

ஒரு குறிப்பிட்ட அகவைக்கு மேற்பட்ட எல்லாக் குடிவாணரும் (citizens) அதன் உறுப்பினர் (பெரும்பாலும் இருபது). பொதுவாக, ஓர் ஆண்டிற்கு நாற்பது முறை அது கூடிற்று. தேவையானபோது சிறப்புக் கூட்டங்களும் நடை பெற்றன. ஏறத்தாழ எல்லாவுறுப்பினரும் கூட்டத்திற்கு வரும்