உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

பொருட்டு, கூட்டநேரங்களில் கடைகளெல்லாம் சாத்தப் பட்டிருக்க வேண்டுமென்று கட்டளையிருந்தது. கூட்டத்தில் எந்த வுறுப்பினரும் பேசலாம். நாட்டைப்பற்றிய முதன்மை யான செய்திகளெல்லாம் கூட்டத்திற் பேசி முடிபு செய்யப் பட்டன. அம் முடிபிற்குமேல் தீர்ப்பு ல்லை.

ii) ஐந்நூற்றுவர் மன்றம் - The Council of the Five Hundred (Boule)

ஏதென்சு மக்கள் பத்துக் குக்குலங்களாக (tribes) அமைந் திருந்தனர். ஒவ்வொரு குக்குலத்தினின்றும் முப்பது அகவைக்கு மேற்பட்ட ஐம்பதின்மர் சீட்டுப்போட்டுத் தெரிந்தெடுக்கப்பட் டனர். பேரவைக் கூட்டத்திற்கு வேண்டிய நிகழ்ச்சி நிரலை உருவாக்குவதும், பேரவைத் தீர்மானங்களை நிறைவேற்றுவதும், மன்றத்தின் கடமை. மன்றம் நாள்தோறுங் கூடிற்று. ஆண்டு முழுவதையும் பத்துக் காலப்பிரிவாகப் பகுத்து, ஒவ்வொரு காலப் பிரிவிலும் ஒவ்வொரு குக்குலம் முறைப்படி பணி யாற்றி

வந்தது. பணியாற்று ங் குக்குலத்தினின்று,

ஒரு

நாளைக்கொருவர் தலைவராகச் சீட்டுப் போட்டுத் தெரிந் தெடுக்கப்பட்டார். கப்பல் கட்டுவதை மேற்பார்த்தல், பொதுப் பணி செய்தல், செலவுகளைத் திட்டஞ்செய்தல், குதிரைப் படையைக் காத்தல், வறியார்க்குதவி, அயல்நாட்டுறவு முதலிய அன்றாட ஆள்வினைகளை மன்றங் கவனித்துவந்தது. அதுவே ஏதென்சின் நிலையான அரசு. அதற்கு நல்ல சம்பளங் கொடுக்கப்பட்டது.

பேரவைக் கூட்டத்திற்குத் தலைவராக மன்றவுறுப்பினர் ஒருவரே சீட்டுப்போட்டுத் தெரிந்தெடுக்கப்பட்டார்.

iii) அரத்தன் குன்றம் (The Areopagus)

குற்றவழக்குத் தீர்த்து மதவியல் வினைகளை மேற்பார்க்கும் வாழ்நாள் உறுப்பினர் குழு.

iv) அலுவலர் (The Officers)

தீர்ப்பாளர், பணத்துறை யலுவலர், அரசியற் கணக் காய்வார், சாலை மேற்பார்ப்பார், நிறைமுகவையதிகாரிகள், சிறைக்கோட்டக் காவலர் முதலிய பல்வகை யலுவலருள் நூற்றிற்குத் தொண்னூற்றைவர் சீட்டுப்போட்டுத் தெரிந்தெடுக் கப்பட்டனர். அவர் பணிக்காலம் ஓராண்டு. தெரிந்தெடுக் கப்பட்ட பின்பும் பணிமுடிந்த பின்புமாக, ஒவ்வொருவரும் இருமுறை ஆய்நோட்டஞ் செய்யப்பட்டனர். தவறு செய்தவர் தண்டிக்கப்பட்டனர்.