உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

v) மக்கள் அறமன்றம் - The Popular Jury Court (Heliaea)

தொடக்கத்தில், ஒரு

19

ஆண்டுதொறும் பிரிவிற்கு ஐந்நூற்றுவராகப் பத்துப் பிரிவாகப் பிரிக்கப்படும் ஐயாயிரவர், முப்பது அகவைக்கு மேற்பட்டவர், அறமன்ற வுறுப்பினராகத் தெரிந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு வழக்கையுங் கேட்டுத் தீர்ப்பவர் யார் என்பதும் சீட்டுப் போட்டே தீர்மானிக்கப் பட்டது.

சிறு வழக்குகளெல்லாம் நடுவரால் தீர்க்கப்பட்டன வென்பதும், அறமன்றத்தார்க்குச் சம்பளம் கட்டாயமன்று என்பதும், அவர் தொகை ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் என்பதும் மக்களறமன்றம் பெரும்பாலும் பெயரளவாகவே அல்லது பெருமதிப்பின்றியே இருந்திருக்கலாம் என்று கருத இடந்தருகின்றன.

படைத்தலைமை போன்ற பதவிகள் எல்லாம் அமர்த்த மாகவேயிருந்திருத்தல் வேண்டும்.

கி.மு. 5ஆம் நூற்றாண்டில், கிரேக்க நகரநாடொன்றில் முழுக்குடியரசு தோன்றியமைக்கு, நிலப்பரப்பின் குறுக்கமும் மக்கட் டொகையின் சுருக்கமுமே கரணியமாயிருத்தல் வேண்டும். ஒரு நாட்டுக் குடிகளின் தொகை, பத்தாயிரத்திற்குக் குறையாதும்

ஓரிலக்கத்திற்குக் கூடாது மிருத்தல் வேண்டும் என்று

அரிசுற்றாட்டில் (Aristotle) கூறியிருப்பது, இதற்குச் சான்றாகும். ஒரு கிரேக்க நகரநாடு பரப்பளவில் தமிழகத்தி லிருந்த ஒரு வேளகத்திற்கே ஒப்பாகும்.

2. உரோமவரசு (The Government of Rome)

தேய நாடாகவன்றி நகரநாடாகத் தோன்றிய உரோமக் கோவரசு, உரோமநகர் கட்டப்பட்டதிலிருந்து (கி.மு.753) கி.மு. 510 வரை நீடித்திருந்தது. அதன்பின் அது மக்களாட்சியாக (Republic) மாறிற்று.

முதற்கண் மேன்மக்கள் (Patricians) என்றும், தாழ்மக்கள் (Ple- beians) என்றும், இருவேறு வகுப்பாரிருந்தனர். தாழ்மக்களுக்கு அரசியல் (Political), பொருளாட்சியியல் (Economics), குமுகாய வியல் (Social) என்னும் முத்துறையிலும் உரிமையில்லாதிருந்தது. அதனால் அவர் இடைவிடாது எதிர்த்துப் போராடி நாளடை வில் அவற்றைப் பெற்றுவிட்டனர்.