உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை மக்களாட்சியமைப்பு (கி.மு.3ஆம் நூற்.)

1. கரும நிறைவேற் றலுவலர்

i) இரு பகராளர் (Two Consuls), ஆண்டுதோறும் நூற்றகப் பேரவையால் (Comitia Centuriata) தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை மகத்தீர்ப்பர் (Chief Magistrates), பிறநாட்டுறவு வினைகளில் நாட்டைப் படிநிகர்த்தல் (representation), அதிகாரத்திற் கடங்காதவரைத் தண்டித்தல், மூப்பரவையைக் (Senate) கூட்டித் தலைமை தாங்கல், அரசறிக்கைகளை விளம்பரஞ்செய்தல் ஆகிய பணிகளால் குடியியல் ஆள்வினைத் (Civil Administration) தலைவராக இருந்தனர்.

ii) ஆறு முனைவர் (Six Proctors) ஆண்டுதோறும் நூற்றகப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவர் தலைநகர்த் தீர்ப்பாளர் (Judges), நால்வர் சிசிலி (Sicily), சாடினியா(Sardinia) போன்ற மண்டலத் தலைவர்.

iii) இரு கடிவர் (Two Censors) நூற்றகப் பேரவையால் ஒன்றரை யாண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பணத்துறைப் பொறுப்பு, குடிமதிப்பை எடுத்துவைப்பு, பட்டியலைத் தொகுத்து வைப்பு அவர் பணிகள்.

மூப்பரவைப்

iv) நாற் பொதுப்பணியர் (Four Aediles) ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவர் வையப் பொதுப்பணியர் (Curule Aediles) எனப்பட்டனர். அவர் ஓராண்டு மேன்மக்களினின் றும் ஓராண்டு தாழ்மக்களினின்றுமாக மாறிமாறிக் குக்குலப் பேரவையால் (Comitia Tributa) தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏனை யிருவர் தாழ்மக்கள் அவையால் (Concilium Plebis) தாழ்மக்களி னின்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். நகராட்சியில் வெளிநாட்டுற வதிகாரிகட்கு உதவி, அரசு கணக்கேடுகள், பொதுக் கட்டடங் கள், குடிநீர் ஏற்பாடு ஆகியவற்றின் பொறுப்பு, அங்காடிகளை ஒழுங்குபடுத்தல், காவல்வினை என்பவை அவர் கடமை.

v) எண் கேள்வியர் (Eight Quaestors) குக்குலப் பேரவையால் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். படைகட்குச் சம்பளங் கொடுப்பதும் வரித்தண்டலும் அவர் பணிகள்.

vi) பத்துப் பொதுவர் (Ten Tribunes) ஆண்டுதோறும் தாழ் மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். தீர்ப்பாளராலும் மேலதிகாரிகளாலும் தாழ்மக்களுக்குச் செய்யப்படும் முறை கேடுகளினின்றும் கொடுமைகளினின்றும் அவர்களைக்