உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

21

காப்பதே அவர் கடமை. அதற்கென்று நாலதிகாரங்கள் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. அவையாவன:

அ) வெட்டதிகாரம் (Power of Veto - intercessio) ஆ) வலிமையதிகாரம் (Power of force - coercitio)

இ) தகைப்பதிகாரம் (Power of arrest - prehensio)

ஈ) தாழ்மக்களவையின் தீர்மானப்படி சட்டங்களியற்ற அடி கோலும் அதிகாரம்.

2. நாற்பேரவைகள்

i) கோட்டப் பேரவை (Comitia Curiata): இது கோட்ட வாரியாக நேரி(vote)யளித்தது. மகத்தீர்ப்பர் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தற்கு இதன் இசைவு வேண்டி யிருந்தது.

ii) நூற்றகப் பேரவை (Comitia Centuriata): இது நூற்றகம் (Century) என்னும் படைப்பிரிவுவாரியாக நேரியளித்தது. பல்துறையலுவலரைத் தேர்ந்தெடுத்தல், போர் தொடுத்தல், சாவுத்தண்டனை வழக்கைக் கேட்டல் ஆகிய பணிகள் இதற் கிருந்தன.

iii) குக்குலப் பேரவை (Comitia Tributa): இது 35 குக்குல (tribe) வாரியாக நேரியளித்தது. கேள்வியரையும் பொதுப்பணியரையுந் தேர்ந்தெடுத்தல், நூற்றகப் பேரவையொடு கூடிச் சட்டமியற்றல் இதன் வினைகள். வட்டிக்குக் கடன் கொடுத்தல் போன்ற வழக்குகளை வையப் பொதுப்பணியர் இதன் முன்னிலையிற் கேட்டனர்.

iv) தாழ்மக்களவை (Concilium Plebis): இது தாழ்மக்களே கொண்டது. இதுவுங் குக்குல வாரியாக நேரியளித்தது. பொது வரையும் பொதுப்பணியரையுந் தேர்ந்தெடுத்தல், சட்டம் பிறப்பித்தல், பொதுவர் அல்லது தாழ்வகுப்புப் பணியர் இட்ட தண்டத்தை யெதிர்த்த வழக்கைக் கேட்டல் ஆகிய பணிகளை இது செய்தது.

3.மூப்பரவை (Senate)

இது எல்லா வகையிலுந் தலைசிறந்த 300 மக்களை உறுப்பினராகக் கொண்டது; ஐயாண்டிற் கொருமுறை கடிவரால் மாற்றியமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற மகத்தீர்ப்ப ரெல்லாம் இதன் உறுப்பினராயினர். கொள்கையளவில் இது சூழகர்க்கு அறிவுரைக் குழு; கூட்டப் பட்டால்தான் இது கூடும்.