உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

23

குடிவாணரின் கமுக்கக் குடவோலையால் (secret ballot) 5 ஆண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர் 21 அகவைக்குக் குறையாதவராயிருத்தல் வேண்டும். ஒருவருக்கு ஒரே நேரி (vote).

குடியுரிமையைப் பேணிக் காக்கும் நாடாளு மன்றம், இங்கிலாந்தில் 1265இலேயே எளிய முறையில் தோன்றி, 1295இல் பெருவளர்ச்சியடைந்து பாளையத்தார் (barons), குரவர்(clergy), பொதுமக்கள் என்னும் மூவகுப்பையும் (Three Estates) இணைத்து, இற்றை நாடாளுமன்றத்திற்கு முற்போலிகை யாயிற்று; அதிலிருந்து உரிமையிலும் அதிகாரத்திலும் மேன்மேல் வளர்ந்து வந்திருக்கின்றது. அது பிற்காலத்துத் தோன்றிய குடியரசுகட்கெல்லாம் வழிகாட்டிற்று என்பது மிகையாகாது. 4. அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அரசு (Government of the USA)

அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அரசு கூட்டுநாட்டு மக்களாட்சி அல்லது மக்களாட்சிக் கூட்டரசு (Federal Republic). இது 1789-இல் 13 நாடுகள் கொண்டதாகத் தொடங்கி, இன்று 50 நாடுகள் கொண்டதாகப் பெருகியுள்ளது.

இதன் தலைவர் (President) உறுப்புநாடுகளால் நாலாண் டிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். அவருக்கு உதவியாயிருப்பவர் துணைத் தலைவர். கருமநிறைவேற்றல் (Executive), சட்டமியற்றல் (Legislative), தீர்ப்புச்செய்தல் (Judicial) என்னும் முத்துறையிலும் தலைவர்க்குப் பேரதிகாரமுண்டு.

சட்டசவைபோல் அவர்க்குத் துணையா யிருப்பது பேராயம் (Congress). அது மூப்பரவை (Senate) என்னும் மேலவையையும், படிநிகராளியரவை (House of Representatives) என்னுங் கீழவையையுங் கொண்டது.

மூப்பரவைக்கு ஒவ்வொரு நாட்டினின்றும் இருவர் ஆறாண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். ஈராண்டிற் கொருமுறை மூன்றிலொரு பங்கு மூப்பரவையுறுப்பினர் ஓய்வுபெறுவர். ஓய்வுபெற்றவர் மீண்டுந் தேர்ந்தெடுக்கப்படலாம். முப்பதக வைக்குக் குறையாதிருத்தலும், அமெரிக்கநாட்டில் ஒன்ப தாண்டுக் குடியிருப்பும் மூப்பரவை யுறுப்பினர் தகுதியாகும். தேர்ந்தெடுக்கப்பட்டபின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டில் வதியக்கூடாது. உறுப்பாண்மைக் காலத்தில் அமெரிக்க நாட்டில் வேறோர் அலுவலையும் மேற்கொள்ளக் கூடாது.

படிநிகராளிய ரவைக்கு, முப்பதாயிரவர்க்கு ஒருவராக, நாடுகளின் மக்கட்டொகைக்கு ஏற்றவாறு ஒருவரும் பலருமாக