உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

436 பேர் ஈராண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். அமெரிக்க நாட்டில் 7 ஆண்டுக் குடியிருப்பும், 25 அகவைக்குக் குறையா திருப்பதும் உறுப்பினர் தகுதியாகும்.

குல மத நிற பால் வேறுபாடின்றி அமெரிக்க வாணரெல் லாம் நேரி (vote) யிடலாம். உறுப்பினர் தகுதியே நேரியர் (voters) தகுதியும்.

அமெரிக்க அரசியற் கட்சிகள் குடியரசாளர் (Democrats), மக்களாட்சியர் (Rupublicans) என இரண்டே. முன்னது நடுவ ணாட்சி (Central Government) வலிமையையும், பின்னது நாடுகளின் (States) உரிமையையும் பேணிக்காப்பன.

பிற்கால மக்களாட்சி நாடுகட்கெல்லாம் வழிகாட்டி யாயிருப்பது, அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அரசே. அதன் அமைப்பு, நிலைப்பிற்கும் செம்மைக்கும் பெயர் பெற்றது. இதுவரை 22 திருத்தங்களே நிகழ்ந்துள்ளன.

6. பிரெஞ்சு அரசு

தனியாட்சிக் கோவரசா (Absolute Monarchy) யிருந்த பிரெஞ்சு அரசு, 1789ஆம் ஆண்டுப் புரட்சியினால் ஒழிந்து, தனி நாட்டு மக்களாட்சி (Unitary Republic) தோன்றிற்று. அதிலிருந்து இரு பேரரசுகள் இடையிட்ட 5 மக்களாட்சிகள் தோன்றி யுள்ளன. இன்று நடப்பது மிகச் சீர்ப்பட்ட 5ஆம் மக்களாட்சி.

அதன் தலைவர், மூப்பரவை (Senate) என்னும் மேலவை யாலும், படிநிகரியர் அரங்கு (Chamber of Deputies) என்னும் கீழவையாலும், பெரும்பான்மை நேரிகளால் 7 ஆண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். ஈரவையுஞ் சேர்ந்தது தேசியப் பேரவை (National Assembly).

பழமை போற்றல் (Conservatism), தாராளிகம் (Liberalism) அடிப்படை மாற்றம் (Radicalism), கூட்டுடைமை (Socialism) என்னும் நாற்கொள்கை யடிப்படையில் இருபதிற்கு மேற்பட்ட குழுக்களிருப்பதால், அமைச்சரும் பல்குழுவின ராகின்றனர். அதனால் நிலையின்மையும் ஒற்றுமையின்மையும் பிரெஞ்சு அரசை அடிக்கடி ஆட்டியலைக்கின்றன.

6. சுவிட்சர்லாந்து அரசு

சுவிட்சர்லாந்து, நாற்பதிலக்கம் மக்களைக் கொண்டு, 22 காண்டங்களாகப் (Cantons) பகுக்கப்பட்டுள்ள ஒரு கூட்டரசு