உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

25

(Federal Government). அது 1648-ல் உடன்கூட்டரசாகத் (Confederation) தோன்றி, 1848-ல் கூட்டரசாக மாறிற்று.

நாடுகள் மன்றம் (Council of States) என்னும் மேலவையையும், தேசியமன்றம் (National Council) என்னும் கீழவையையுங் கொண்ட அதன் கூட்டரசு பேரவை (Federal Assembly), எழுவரைக் கொண்ட கூட்டரசுமன்றம் (Federal Council) என்னும் தலைமை யாட்சிக் குழுவை நாலாண்டிற்கும் அதன் தலைவரையும் துணைத் தலைவரையும் ஓராண்டிற்கும் தேர்ந்தெடுக்கின்றது.

சுவிட்சர்லாந்து சிறுநாடாயினும், அதன் அரசு மாபெருங் குடியரசுகட்கும் வழிகாட்டியாக, இரு சிறந்த கூறுகளைக் கொண்டுள்ளது. அவை கருத்தெடுப்பு (Referendum), தொடங்கி வைப்பு (Initiative) என்பன. கூட்டரசு ஒரு சட்டத்திருத்தஞ் செய்ய வேண்டின், பொதுமக்கள் கருத்தைக் கேட்டுப் பெரும் பான்மைப்படி முடிபு செய்வது கருத்தெடுப்பு; பொதுமக்கள் ஐம்பதினாயிரவர்க்குக் குறையாதவர் ஒரு சீர்திருத்தச் சட்டஞ் வேண் வேண்டின், அதைத் தாமாகக் கூட்டரசிற்குத் தெரி விப்பது தொடங்கி வைப்பு.

செய்ய

7. இரசிய அரசு

இரசியவரசு 1917 வரை கொடுங்கோற் கோவரசாகவும் முற்றதிகார ஆட்சியாகவுமிருந்து, பின்னர், சென்ற நூற்றாண் டில் காரல் மார்க்கசு (Karl Marx) முதலுந் தொழிலும்பற்றி முற்ற ஆராய்ச்சி செய்து இயற்றிவைத்த முதல் (Capital) என்னும் வெளியீட்டின் விளைவாக, புரட்சி வண்ணமான கூட்டுடைமை யாட்சியாக மாறிற்று. முதலாம் உலகப்போரில் இரசியா தோல்வியடைந்ததும் இதற்குத் துணையாயிற்று.

இற்றை இரசிய நாடு, பாராளுமன்றக் கூட்டுடைமை மக்களாட்சி ஒன்றியம் (Union of Soviet Socialist Republics) எனப்படும். து 15 கூட்டுடைமை மக்களாட்சி நாடுகளை உறுப்புகளாகக் கொண்ட கூட்டுநாடு.

ஒன்றியத்தின் அதிகாரத்திற்குட்பட்ட மிக முதன்மையான பொருட்டுறைகள்: போர், நட்பமைதி (Peace), வெளிநாட்டுறவு, புது மக்களாட்சி நாடுகளை உறுப்பாகச் சேர்த்தல், தற்காப்பு, சேர்த்தல்,தற்காப்பு, நாட்டு முற்றுரிமை, வெளிநாட்டு வாணிகம், ஒன்றியத்தின் தேசியப் பொரு ளாட்சித் திட்டங்களை ஏற்படுத்துகை, வைப்பக