உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

(Banks) ஆட்சி, உழவு, தொழில் நிறுவனங்கள், அனைத் தொன்றிய முதன்மையான வணிக முயற்சிகள், வழிக்கடத்தப் போக்குவரத்து அமைப்பு, ஆள்வினை, பணவொழுங்கையும் கடன்கொடுப்பு முறைகளையும் ஆற்றுப்படுத்தல், நாட்டு வைப்புறுதி (Insurance) யேற்பாடு, ஒன்றியக் குடிமைபற்றிய சட்டங்கள் என்பன. இவையன்றி, நிலநீர்ப் பயன்படுத்தம், பொதுமக்கள் உடல்நலம், தொழிலாளிகள் பற்றிய சட்டம் ஆகியவை குறித்தும் அடிப்படை நெறிமுறைகளை எஞ்சிய

உருவாக்க

லாம்.

பொருட்டுறைகளெல்லாம் உறுப்பு நாடுகட் குரியன.

ரசியக் கூட்டுநாட்டின் சட்டசவையாகிய உம்பர்ச் சூழ்வுரை மன்றம் (Supreme Soviet), ஒன்றியச் சூழ்வுரை மன்றம் (Soviet of the Union) என்னும் மேலவையும், நாட்டினக் கூறுகளின் சூழ்வுரை மன்றம் (Soviet of the Nationalities) என்னுங் கீழவையுங் கொண்டது. மேலவை, மூவிலக்கவருக்கு (3,00.000 பேருக்கு) ஒருவராக நாலாண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 738 உறுப் பினரைக் கொண்டது; கீழவை பல்வேறு அமைப்பகங்களின் சார்பாக அதே காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 640 உறுப்பி னரைக் கொண்டது. உறுப்பினர் 23 அகவை நிரம்பியவராயிருத் தல் வேண்டும். பித்தருங் குற்றவாளியருமல்லாது, குல மத நிற பால் பதவி திறமை வேறுபாடின்றி, 18 அகவைக்குக் குறையாத எல்லாரும் நேரியர். நேரி ஒருவருக்கொன்று. குடவோலை கமுக்கம்.

சமவலிமையுள்ள

ஈரவையுஞ் சேர்ந்து, அமைச்சர் மன்றையும் (Council of Ministers), நிலைக்குழுவையும் (Presidium), உம்பர் அறமன்றத்தையும் (Supreme Court) தேர்ந்தெடுக்கும். அமைச்சர் மன்றே நாட்டிலுயர்ந்த நிறைவேற்றக் குழு.

தனியுடைமை நாடுகளிற்போல் இரசியக் கூட்டுடைமை நாட்டில் தனிப்பதவித் தலைவரின்மையால், ஒரு பொதுத் தேர்தலிலிருந்து மறு பொதுத்தேர்தல் வரை நிலைக்குழு நிலைத்திருந்து, ஆண்டிற்கு இருமுறைக்குக் குறையாது ஒன்றியச் சூழ்வுரை மன்றத்தைக் கூட்டுதல், ஈரவையும் பிணங்கும்போது அவற்றைக் கலைத்துவிட்டு மறு தேர்தலுக்கு ஏற்பாடு செய்தல், தேவையானபோது கருத்தெடுப்பிற்கு ஒழுங்குபண்ணுதல், மந்திரிமாரை அமர்த்தல் அல்லது நீக்குதல், உம்பர்ச் சூழ்வுரை மன்றத்தின் இரு கூட்டங்கட்கிடையில் போர் தொடுத்தல்,

டதிரட்டல், படைத்தலைவரை அமர்த்துதல் அல்லது