உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

27

தள்ளுதல், தூதரை அமர்த்துதல் அல்லது விலக்குதல், பிற நாட் டொடு செய்த உடன்படிக்கையை உறுதிப்படுத்துதல், குற்றங் களை மன்னித்தல், பட்டம் வழங்குதல் ஆகிய பணிகளைச் செய்யும்.

இரசிய அரசின் சிறப்புக் கூறுகள்

ஒரேகட்சியுண்மை, தனித்தலைவரின்மை, முரண்பட்ட கொள்கையர்க்கும் முதலாளிகட்கும் இடமின்மை, பெரும் பொருளீட்ட வாய்ப்பின்மை, மதவியல் வளர்ச்சியின்மை முதலியன தனியுடைமை நாடுகளிலில்லாத ஒருமருங்கு தீய கூறுகள்.

கூட்டுடைமை, வேலையில்லாத் திண்டாட்டமின்மை, குமுகாயச் சமன்மை, குற்றவினைக் குறைவு, வீண்செலவு செய்யாமை, களவு முதலியன

கொள்ளையச்சமின்மை,

தனியுடைமை நாடுகளிலில்லாத நற்கூறுகள்.

கூட்டுடைமையரசைக் குடியரசன்றென்று பழிப்பர். எல்லார்க்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திய பின்பே, ஏனை நாடுகள் அதைக் குறைகூறவொண்ணும்.

5. உலக நாட்டு வகைகளும் அரசு வகைகளும்

நாட்டு வகைகள்

ஊர்நாடு, நகரநாடு, தேயநாடு, கூட்டரசுநாடு (Federal State), உடன் கூட்டுநாடு (Confederation of States).

ஊர்நாடு அநாகரிகக் காலத்தது அல்லது அநாகரிக

மாந்தரது.

அரசு வகைகளும் ஆட்சி வகைகளும்

1. குடித்தலைமை வகை

தாயாட்சி (Matriarchy), தந்தையாட்சி (Patriarchy).

2. ஆள்வார் வகை

(Monarchy),

தெய்வாட்சி (Theocracy), கோவரசு குருக்களாட்சி (Hierocracy), சீரியோராட்சி (Aristocracy), செல்வராட்சி (Plutocracy), குடியரசு (Democracy), முதியோராட்சி (Gerantocracy), உழைப்பாளராட்சி (Ergatocracy), படையாட்சி (Stratocracy), மன்பதை யாட்சி (Mobocracy, Ochlocracy).