உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

களைகணில்லாக்கால் உயிர்வாழ வேண்டின், இரப்பெடுத்தல் இன்றியமையாத தாகும்.

க்காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பல தொழிலாளர், சிறப்பாக நெசவாளர், செல்வரையும் பெருஞ் சம்பளக் காரரையும் இரக்க நேர்கின்றது, இரப்பு உயர்திணை மகனின் மதிப்பையும் மானத்தையும் கெடுத்தலால்,

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக வுலகியற்றி யான்"

99

(குறள்.1062)

என்று, உலகத்தைப் படைத்த இறைவன் மேலும் தம் சினத்தைக் காட்டினார் திருவள்ளுவர்.

க்கால நன்

இரத்தலைத் தவிர்க்கவேண்டுமென்றே, மக்களும் அரசும் களைகண் இல்லம் (Orphanages), தொழுநோயர் விடுதி (Leper Home), முதியோர் மனை (House for the Old) முதலியன ஆங்காங்குக் கட்டியும் அமைத்தும் உள்ளனர்.

ஆயினும், அளவிற்கு மிஞ்சி இருமடங்கும் மும்மடங்கும் மக்கட்டொகை டாகை பெருத்தும் ஆயிரக்கணக்கானவரும் இலக்கக் கணக்கானவரும் வேலையின்றியும் இருக்கும் இக்காலத்தில், வள்ளுவர் வகுத்த பாத்துண்டலே எல்லா மக்களும் பண்பாட் டுடன் வாழ்தற்கு இன்றியமையாத தாகின்றது.

3. மக்கட்பண்பாடு

ஆறறிவு படைத்த மாந்தன் உயிரினங்க ளெல்லாவற்றுள் ளும் தான் உயர்திணை அல்லது உயர்குலம் என்று அறிவதால், பாத்துண்ணும் இயல்புடைய காக்கை போலும் சில அஃறிணை யினங்களினும் பண்பாட்டில் தாழாவாறு, பாத்தூணறத்தைச் சிறப்பாகக் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டுள்ளான்.

1. மன்பதை முழுதும் ஓரினம்

"யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்றார் பூங்குன்றனார் (புறம். 192). "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்றார் திருமூலர் (திருமந். 2104). ஆதலால், ஒவ்வொருவனும் தன்னுயிர் போல் மன்னுயிரைக் கருதல் வேண்டும்.

2. அடிப்படைத்தேவை அனைவர்க்கும் பொது

"தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்