உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வள்ளுவர் கூட்டுடைமை

41

யின்றி உண்டுடுத்து வாழ்வதையே குறிக்கோளாகக் கொண்ட கூட்டுடைமை யாட்சியே, மகிழ்ச்சிதரும் என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை.

கூட்டுடைமை யாட்சியில், கல்வித்தொழிலரும் கைத் தொழிலரும் சமமாகக் கூடிவாழும் உடன்பிறப்புணர்ச்சிக்கு, மதக் கொள்கையே பெரிதும் துணைசெய்யும்.

கிறித்தவர் நம்பும் எதிர்கால ஆயிரவாண்டுலக வரசாட் சிக்குக் கூட்டுடைமைக் கொள்கையே தோதாகும்.

மதம் என்பது, இம்மை மறுமை கடவுள் கடவுள் என்னும் மூன்றையும் பற்றி, ஒருவன் மதித்துக்கொள்ளுங் கருத்தே யன்றி வேறன்று. அதற்கென்று தனியாகப் பொருட்செலவுங் காலச் செலவும், வினை முயற்சியும், இடவொதுக்கீடும் அரசு மேற் கொள்ளவேண்டுவதில்லை. ஒருவன் காலையில் எழுந்தவுடனும், பின்னர் உண்ணுமுன்னும், ஓரிடத்திற்குப் புறப்படு முன்னும், ஒரு வினையைத் தொடங்குமுன்னும், ஒரு நன்மை கிட்டியபோதும், தீங்கு நேர்ந்தபோதும், உறங்கப் புகுமுன்னும், இறைவனை நன்றியறிவொடு அல்லது முறையீட்டுணர்ச்சியொடு கை தொழுது ஒரு நிமையம் எண்ணினாலும், இறை வழிபாடு செய்ததாகும். இங்ஙனம் மனநிலையிலேயே இருக்கக்கூடிய மதத்தை எவரும் அழிக்க முடியாது. இனி, கூட்டுவழிபாடும், ஓய்வு நாளில் அல்லது நேரத்தில், பொதுவிடத்தில் அல்லது ஒருவர் இல்லத்தில், பலர்கூடிச் செய்யலாம். இங்ஙனம் எளிய முறையில், அரசிற்கு எவ்வகை இடர்ப்பாடும் விளைக்காது இயங்கக்கூடியது மதம்.

படிமைமேற் படிக்கணக்காய்ப் பாலைக் கொட்டுவதும், பெருங் கலத்திற் கலக்கணக்காய் நெய்யை வார்த்து விளக் கெரிப்பதும் போன்ற வினைகளே பொருளழிப்பும் வீண் செயலுமாகும்.

கடவுளைக் கட்புலனாகக் காணமுடியாமை பற்றியே, கடவுளுண்மையை மறுத்துவிடமுடியாது. உயிரில்லாத, அதனால் அறிவுமில்லாத, நாள்களும் கோள்களும் தத்தம் நிலையில் நின்றும் நெறியிற் சென்றும் ஒழுங்காகத் தத்தம் தொழிலைச் செய்துவருகின்றன. இத்தகைய நிகழ்ச்சி அவற்றை இயக்குவான் ஒருவனின்றி நிகழ இயலாது. மாந்தனறிவு அளவிலும் ஆற்றலிலும் மிக மட்டுற்றிருப்பதால், எல்லா இயற்கை நிலைமைகளையும் உணர்ந்துகொள்ள வியலாது.