உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

கடவுளுண்மையை எல்லாரும் நம்புமாறு நாட்டிற்குப் போதிய சான்றுகள் இல்லையெனின், அதை மறுத்தற்கும் போதிய சான்றுகள் இல்லையென்பதை உணர்தல் வேண்டும்.

இனி, எங்ஙன மிருப்பினும் மதமே கூடாதெனின், கடவுள் ல்லை யென்பதும் உலகியம் (லோகாயதம் அல்லது சார்வாகம்) என்னும் மதமாதலின், மதத்தைப்பற்றி ஒருவரை யொருவர் தாக்காதிருத்தலே மதியுடைச் செய்தியாம்.

திருவள்ளுவர் தம் நூலைக் கடவுள் வாழ்த்தொடு தொடங்குதலின், வள்ளுவர் கூட்டுடைமை மதத்தை விலக்குவ தன்று என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

இரசிய சீன நாடுகளிலும், கிறித்தவர் சிறுபான்மை யரேனும், இடர்ப்பாடின்றியிருந்து வருவதும் கவனிக்கத்தக்க தாகும். ஆகவே, வள்ளுவர் கூட்டுடைமையே தலைசிறந்ததும் எல்லார்க்கும் எக்காலத்திற்கும் ஏற்றதுமாகும்.

5. கூட்டுடைமையின் நன்மைகள்

1. அனைவர்க்கும் வேலைப்பேறு

நாட்டிலுள்ள எல்லார்க்கும் வாழ்க்கைவழி வகுப்பதே உண்மையான பொறுப்பாட்சி (Responsible Government). அரசர் அல்லது தலைவர், அல்லது தலைமையமைச்சர், நாட்டுமக்கள் நல்வாழ்விற்கு நேரடியாய்ப் பொறுப்பேற்காது சட்டசவைக்கு மட்டும் கணக்குக் காட்டுவது பொறுப்பாட்சியாகாது. சட்ட சவையிற் பெரும்பான்மைக் கட்சி விருப்பந்தான் நிறைவேறும். அது குடிவாணர் அனைவரையுந்தழுவாது.

2. வறுமைத் துன்ப வொழிப்பு

"இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு.

""

(குறள்.1048)

நேற்று என்னை உயிரோடு கொன்றது போலும் வாட்டி வருத்திய வறுமைத் தீ, இன்றும் வந்து வருத்துமோ? வருத்தினால் என் செய்வேன்! எங்ஙனந் தப்புவேன்?

"நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பா டரிது.

(குறள்.1049)

ஒருவன் மந்திரமருந்துகளால் நெருப்பிற் கிடந்தும் நன்றாக உறங்கலாம்; ஆயின், இவ்வறுமைத் தீயில் எவ்வகையிலுங் கண்ணடைக்க வழியில்லையே!