உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வள்ளுவர் கூட்டுடைமை

இவை வறுமையால் வருந்தியவன் கூற்று.

66

'ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்(கு)

இரவின் இளிவந்த தில்.

""

43

(குறள். 1066)

இந்த ஆவு நீரின்றிச் சாகக் கிடக்கிறது; இதற்கு நீர் தந்து உயிர் காக்க என்று, ஒருவன் இன்னொருவனை இரப்பினும், இரந்தவன் நாவிற்கு அவ் விரப்பைப் போல இழிவு தருவது வேறொன்றுமில்லை.

'இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

(குறள்.1069)

பொருளில்லாதவர் உள்ளவரிடம் சென்று இரந்து ஒடுங்கி நிற்கும் வறுமைக் கொடுமையை, ஒருவர் நினைத்தாலுமே உள்ளம் நீராய்க் கரைந்துருகும்; இனி, அங்ஙனம் இரந்தவர்க்கு இல்லையென்று மறுப்பாரின் கன்னெஞ்சையும் கடுந்துணிச் சலையும் நினைத்தாலே, அவ் வுருகும் உள்ளமும் ஒன்றுமில்லா தழிந்துபோம்.

99

"செத்தால் தெரியும் சுடுகாடு என்பது பழமொழி. பட்டவனுக்குத்தான் தெரியும் வறுமைத்துன்பம். அடிக்கடி வறுமையால் நேரும் தற்கொலைகளும் குடும்பக் கொலைகளும் கூட்டுடைமையில் நிகழா.

3. இரப்போர் குடிவாணர்க்குத் தொல்லை தராமை

பெருஞ்செல்வர் மாளிகைகளிலெல்லாம் வாயிற்காவலர் நின்று, இரப்போர் உட்செல்லாவாறு தடுத்துவிடுவர். இடை நிலையர்தாம் இரப்போர் தொல்லைக்கு ஆளாவர். அத்தொல்லை கூட்டுடைமை நாட்டில் இராது. உறுப்பிலிகட்கு ஏற்ற வேலை தரப்படும். தொழு நோயர்க்கும் தொற்று நோயர்க்கும் தனி விடுதிகளிருக்கும்.

4. வாழ்க்கைக் கவலையின்மை

66

கவலை கறியைத் தின்னும்." கவலையினாலேயே குலை வெடித்துச் சாவார் பலர். முதுமைக் காலத்திற்கு முற்காப்புச் செய்ய வேண்டுமென்றே, இளமைக் காலத்திலும் நடுமைக் காலத்திலும் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வாழ்வாரும் உளர். எய்ப்பில் வைப்பு (Provident Fund) இல்லாதவர்க்கும் முதுமைச் சம்பளங் கிடைக்குமாதலால், கூட்டுடைமை நாட்டிற் கவலைக்கே இடமில்லை. ஆதலால், பல தலைமுறை யெச்சத்