உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

திற்குப் பயன்படுமாறு பாடுபட்டுப் பணந் தேடிவைக்க வேண்டுவதில்லை. நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள் என்னும் நசரேயனார் கூற்று, கூட்டுடைமையால்தான் விளக்கம் பெறும்.

-

"உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடி நினைந் தெண்ணுவன மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே தான்.

5. ஆசையடக்கம்

""

கண்புதைந்த

(நல்வழி 28)

"ஆசைக்கோ ரளவில்லை யகிலமெல் லாங்கட்டி ஆளினுங் கடன்மீதிலே

ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக அம்பொன்மிக வைத்தபேரும்

நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்

நெடுநாள் இருந்தபேரும்

நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி நெஞ்சுபுண் ணாவகரெல்லாம்

யோசிக்கும் வேளையிற் பசிதீர வுண்பதும் உறங்குவது மாகமுடியும்

உள்ளதே போதுநான் நானெனக் குளறியே

ஒன்றைவிட் டொன்றுபற்றிப்

பாசக்க டற்குளே வீழாமல் மனதற்ற

பரிசுத்த நிலையையருள்வாய்

பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற

""

பரிபூர ணானந்தமே.

என்ற பாட்டைக் கவனிக்க.

(தாயு. பரிபூர். 10)

6. ஆள்நர் அமைச்சர் அதிகாரிகள் முதலியோர் ஊழலுக்கிடமின்மை 7. கல்லாமை யில்லாமை

இதனால் உண்மையான குடியரசு ஏற்படும். அறிவும் வளர்ந் தோங்கும்.

8. குலப்பிரிவினை நீக்கம்

பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக் குலப்பிரிவினைக்குக் கூட்டுடைமை நாட்டில் இடமில்லை. இதனால் மக்கட் சமநிலை மேம்பட்டுத் தோன்றும். காதல் மணம் தப்பாது நிறைவேறும். குலவெறி, இனவெறி, மதவெறி, மொழிவெறி,