உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வள்ளுவர் கூட்டுடைமை

45

நாட்டுவெறி, கட்சிவெறி முதலிய எல்லா வெறிகளும் பறந் தோடும். உறவுச் சலுகையும் (Nepotism), கடுங்கண்ணோட் டமும் (Fa- vouritism) இன்றித் தகுதிபற்றி வேலையளிக்கப்படும். மாணவர் கல்லூரிகளில் இடம்பெறுவதொடு விரும்பிய பாடவகுப்பிலும் சேர்வர். குற்றவாளிகளெல்லாரும் நடுநிலையாகத் தண்டிக்கப் படுவர். சிறப்பாற்றலரெல்லாம் வேற்றுமை யின்றிச் சிறப்பிக்கப் பெறுவர். நாடு மொழி இனம்பற்றிய உண்மை வரலாறு எழுதப் படும். 9. நாட்டமைதி

ஒரே கட்சி யுண்மையால் ஒற்றுமை ஓங்கும். கலகமும் உள் நாட்டுப் போரும் கிளரா. கடையடைப்பு, வேலைநிறுத்தம், இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்மேற் கல்லெறிந்து வண்டிக் கும் வழிப் போக்கர்க்கும் சேதம் விளைத்தல், வேலைக்குச் செல்வாரைத் தடுத்தல், பொதுக்கூட்டங்களைக் கலைத்தல், கட்டடங்களையிடித்தல், தட்டுமுட்டுகளையுடைத்தல், நிலை வண்டிகளை யெரித்தல், காவலரை யெதிர்த்தல், காவலர் தடியடியும் குண்டுவீச்சும் முதலியன கனவிலும் நிகழா.

10. அரசுச்செலவுக் குறைவு

ஆரவாரமும் அட்டோலக்கமும் இன்மையாலும், அடிக்கடி பொதுத் தேர்தலும் துணைத் தேர்தலும் நிகழாமை யாலும், அரசுச்செலவு மிகக் குறையும்.

11.ஒழுக்கவுயர்வு

பணம்பற்றியே பெரும்பாலுங் கொலை களவு முதலிய குற்றங்கள் நேர்வதால், கூட்டுடைமை நாடுகளிற் குற்றநேர்ச்சி மிகக் குறைவாகவே யிருக்கும்.

கொலை, களவு, சூது, பொய், அலவை (வியபிசாரம்) என்பன ஐம்பெருங் குற்றங்கள்.

பதுக்கம், தேக்கிவைப்பு (hoarding), மிகை யூதியப்பேறு (profiteering), கள்ள வாணிகம் (black marketing), கள்ளக்கடத்தம் (smuggling), கள்ளக் காசடிப்பு, கள்ள மதுவிறக்கம் (illicit distillation) முதலிய வணிகக் குற்றங்களைக் கூட்டுடைமை யாட்சியிற் காணமுடியாது.

ஆட்கடத்தமும் ஊர்தி மடக்கமும் (hijacking) அவ் வாட்சியில் நிகழா.