உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

12. உயிர்ப்பாதுகாப்பு

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

13. பொருட்சேதமின்மை

14. குடும்பவுணர்ச்சி

15. வாழ்நாள் நீடிப்பு

16.உலக வொற்றுமைக்கும் உலகப் பொதுவாட்சிக்கும் வழி கோலல்

6. கூட்டுடைமைப் பண்பாடு

தனியுடைமை நாடுகள் பெரும்பான்மையாகவுஞ் செல்வஞ் சிறந்தும் இருப்பதால், கூட்டுடைமை பொதுவாக, உரிமை யில்லாத தென்றும் நெறிதிறம்பியதென்றும், நீடித்து நில்லா தென்றும், கருதப்படுகின்றது. ஆயின், ஆய்ந்து நோக்கின், ஒரு குடும்பத்திற் பிறந்த எல்லாப் பிள்ளைகளையும் உணவளித்துக் காப்பது தந்தை கடமையாயிருப்பது போன்று, ஒரு நாட்டிற் பிறந்த எல்லா மக்களையும் உணவளித்துக் காப்பது அரசின் கடமை என்பதை அடிப்படையாகக் கொண்ட கூட்டுடைை யாட்சி, “உன்னைப் போலப் பிறனை நேசி" என்னும் உயரிய இறைவன் கட்டளையை நிறைவேற்றுவதால், பண்பாட்டில்

தலைசிறந்ததாகின்றது.

செல்வஞ் சிறந்த நாடுகளிலும் வேலையில்லாத் திண்டாட் டம் ஓரளவு தோன்றியிருப்பதனாலும், போருங் கொள்ளை நோயும் தடுக்கப்பட்ட இக்காலத்தில் மக்கட் டொகை வேகமாகப் பெருகுவதனாலும், நாளடைவிற் கூட்டுடைமையே உலகமெங்கும் பரவும் என்று எண்ணுவதற்கு இடமுள்ளது.

பிறனை நேசிப்பதுடன் கடவுளையுந் தொழுதுவிடின், கூட்டுடைமை யாட்சியே குடியரசின் கொடுமுடியாகிவிடும். கூட்டுடைமையென்பது, கல்வி நிரம்பாத தொழிலாளரை மட்டுங் கொண்டியங்கும் கட்சி யியக்கமாயிராது, கடைநிலை யூழியன் முதல் குடியரசுத்தலைவன்வரை எல்லா அலுவலரை யும், கைவினை பொறிவினை ஆகிய இருவகை வினையுஞ் செய்யும் எல்லா வகுப்பாரையுங் கொண்டு, அறிவியல் (Science), கம்மியம் (Technology) என்னும் இருதிறப்பட்ட எல்லா அறிவுத் துறைகளையும் வளர்த்து, நாடு முழுவதையும் ஆளும் ஆட்சியமைப்பா யிருப்பதால், அதைத் தழுவுவார் அனைவரு ம்