உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வள்ளுவர் கூட்டுடைமை

47

நினைவு, சொல், செயல் என்னும்முக்கரண வொழுக்கத் திலும் மிகப் பண்பட்டவராயிருத்தல் வேண்டும்.

மக்கள் கூடிவாழவும் அறிவைப் பெருக்கவும் இன்றி யமையாத கருவியாயிருப்பது மொழி. நாகரிக மக்கள் பேசும் ஒவ்வொரு மொழியும், இலக்கண வரம்புள்ளதாயும் இலக்கியங் கொண்டதாயும் இருக்கின்றது.

உயிரினங்களெல்லாம், பகுத்தறிவுண்மை யின்மை பற்றி உயர்திணை அஃறிணை என இருவகைப்படும். உயர்திணையைச் சேர்ந்த மாந்தனுக்கு, அகவுடம்பு புறவுடம்பு என இருவகை யுடம்பு உள்ளன. மதி (புத்தி), உள்ளம் (சித்தம்), மனம், நானுணர்வு (அகங்காரம்) என்னும் அகக்கரணங்களோடு கூடிய உயிர் அகவுடம்பு; உயிரைக் கொண்டிருக்கும் (கை கால் முதலிய உறுப்புகளையுடைய) ஊனுருவம் புறவுடம்பு புறவுடம்பு உணவினாலும் அகவுடம்பு அறிவினாலும் வளர்ச்சியடையும். புறவுடம்பைப் போன்றே அகவுடம்பையும் வளர்ப்பது மாந்த னுக்கு இன்றியமையாதது.

அறிவு, பொதுவாக, கல்வியினால் அடையப்படுவது.

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

""

(குறள்.391)

கற்கவேண்டிய நூல்களைப் பிழையில்லாது இளமையிற் கற்க; கற்ற பின், அக் கல்விக்குத் தக்கவாறு நன்றாய் ஒழுகுக.

இளமையிற் கல்வி கற்காதவன் தன் இடைமையிலும் முதுமையிலும் அறிஞர் சொற்பொழிவுகளைக் கேட்டு அறிவடையலாம்.

"கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை.

""

(குறள். 414)

ஒருவன் பிள்ளைப்பருவத்திற் பள்ளியிற் கற்றிராவிடினும், சொற்பொழிவுகளைக் கேட்டு

பிற்காலத்தில் அறிஞர்

அறிவடைக. அவ்வறிவு மனந்தளருந் துன்பக்காலத்தில் ஊன்று கோல் போல உதவும்.

செவியாற் கேட்டறியும் அறிவு செவியுணவு என்றும், சமைக்கப்பட்ட பொதுவகையான உணவு அவியுணவு (அவிக்கப் பட்டவுணவு) என்றும் சொல்லப்படும்.