உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

அறுபான் சம்பாக்களுட் பல வழக்கற்றுப்போயின. சிறுமணிச் சம்பா, பெருமணிச் சம்பா, சீரகச் சம்பா ஆகிய சிறந்த வகை களைக் காண்பதும் அரிதாகிவிட்டது. செந்தினை, கருந்தினை ஆகிய தினை வகைகளும் வழக்கற்றுவிட்டன. பாண்டிநாட்டில் மட்டும் விளைவிக்கப்படும் காடைக் கண்ணியும் குதிரை வாலியும் இன்று அருகிவருகின்றன. கற்பயறும் கரம்பைப் பயறும் இங்ஙனமே.

நெல்லை மிகுதியாக விளைவிக்க வேண்டுமென்று, புன்செயெல்லாம் நன்செயாக்கப்பட்டு வருகின்றது. புன்செய்ப் பயிரிடக் குறுங்காடுகளும் பெருங்காடுகளும் பலவிடங்களில் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால், விறகுத்தட்டும் வேட்டைக் குறைவும் ஏற்பட்டுவிட்டன. ஆடுமாடுகட்கு மேய்ச்சல் நிலமுங் குன்றிவிட்டது.

மரவிறகிற்குப் பகரமாக (பதிலாக), பலர் மண்ணெண் ணெயையும் ஆவியையும் (gas) பயன்படுத்துகின்றனர். அவையும் சில சமையங்களிற் கிடைப்பதில்லை.

உடும்பு, முயல், மான், காட்டுப்பன்றி, காடை, கதுவாலி, புறா, காட்டுக்கோழி முதலிய உயிரிகள் இந் நூற்றாண்டுத் தொடக்கம்வரை வேண்டும்போதெல்லாம் வேட்டையாடப் பட்டு வந்தன; அரூர், பெண்ணாகரம் போன்ற மலையண் மையூர்க் கிழமைச் சந்தைக்கும் விற்பனைக்கு வந்தன. அஃதொழிந்தது.

ன்று

விறகிற்காகவும் தச்சுவினைக்காகவும் குளம்பி (coffee) கொழுந்துத் (tea) தோட்டங்கட்காகவும் குடியிருப்பிற்காகவும் குடமலைத்தொடரிலும் பிறமலைத்தொடரிலுமுள்ள மரங் களையும் ஏராளமாக வெட்டிவிட்டதனால், மக்கள் வாழ்க் கைக்கு இன்றியமையாத மழையுங் குன்றிவிட்டது.

ஒரு வெப்ப நாட்டில் ஆண்டுதோறும் ஒழுங்காக மழை பெய்தற்கு முக்காற்பங்கு மரமடர்ந்த காடிருப்பது தலை; 2/3 பங்கு இருப்பது இடை; 1/2 பங்கு இருப்பது கடை. இன்றோ 1/3 பங்குமில்லை.

முன்காலத்தில் முக்காற்பங்கு காடிருந்ததனால்,

66

'வையை யென்ற பொய்யாக் குலக்கொடி

தையற் குறுவது தானறிந் தனள்போற்

புண்ணிய நறுமல ராடை போர்த்துக்

கண்ணிறை நெடுநீர் கரந்தன ளடக்கிப்