உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

அணிய முடிகின்றது. விரும்பிய வேலைப்பாடும் வடிவுமுள்ள நகைகள் புதிதாய்க் கிடைப்பதுமில்லை. வெள்ளிநகை யென்பது வெண்ணிற அணியென்றும், பொன்னகை யென்பது பொன் நிற அணியென்றும் தான் இனிப் பொருள்படும்.

உறையுள்

நகரங்களிலெல்லாம் குடியிருக்க வாடகைவீடு எளிதாய்க் கிடைப்பதில்லை; கிடைப்பின் வாடகை மிகவுயர்வு. மனை நிலமோ பதின்மடங்கு விலையேறியிருப்பதுடன், ஆண்டு தொறும் மேன்மேலும் ஏறிக்கொண்டே செல்கின்றது. அவ் விலைக்குங் கிடைப்பதில்லை. எளியார் வீடுகளுங் குடிசைகளும் முதலாழ்வார் மூவர் ஒதுங்கிய இடைகழியின் நிலைமை யடைந்துவிட்டன.

அரசியற் கட்டடங்களில் தாழ்வாரங்களும் டை கழிகளும் அலுவலகங்களாகிவிட்டன.

மருத்துவ சாலைகளில் தாழ்வாரமெல்லாம் யீடில்லாப் பாய்ப்படுக்கைகள் நிரம்பிவிட்டன.

டை

புதிய நகரமைப்புகளாலும் குடியேற்றங்களாலும், பல நூற்றாண்டுகளாகப் பாடுபட்டுப் பண்படுத்தப்பட்ட பழனங் கள் (பழமையான வயல்கள்) பாழாய்ப் போயின. இங்ஙனம், மக்கள் தொகை மிகமிகப் பெருகவேண்டிய விளைநிலம் வரவரச் சிறுகி வருகின்றது.இதனால் உணவுத்தட்டு மேலும் அதிகரிக் கின்றது.

தொழிலாளரும் தாழ்த்தப்பட்ட வகுப்பாரும் வதியும் இடங்களிலெல்லாம், தெருக்களிலும் சாலைகளிலும் இரு மருங்கும் செய்யப்படும் துப்புரவுக்கேட்டை, நினைப்பினும் சொல்லொணாத அருவருப்புணர்ச்சியுண்டாம். நகரம் நரகமா கின்றது. மாநகரமோ மாநரகமே. சாலை நடுவிற் சென்றால் வண்டிகட் கச்சம்; ஓரத்திற் சென்றால் ஈறுமாறிய நரகத்திற் கச்சம். இத்தகைய தீய நாற்றச் சூழலில் தூய காற்று எங்ஙனம் வீசும்? வீசுங்காற்றெல்லாம் வீச்சமன்றோ? அமைதிக்குச் சிறந்ததாகச் சொல்லப்படும் நாட்டுப்புறச்சூழலும் இக்கால் இத்தகையதே! என்றோ ஒருகால் வரும் பெரு வெள்ளம் எல்லா வற்றையும் அடித்துக்கொண்டு போய்க் கடலிற் சேர்ப்பினும், மீண்டும் பழைய நிலைமையே நேர்வதால், உலகிலுள்ளவரை அல்லது மக்கட்டொகை சரிபாதியாகக் குறையும் வரை, உலாச் செல்ல இடமில்லை.