உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

கைத்தொழிற்சாலைகளும் பொறித் தொழிற்சாலைகளும்

மிகுந்து மக்கள் குடியிருப்பிற்கு நெருங்கிவிட்டதனால், நச்சுப் புகையும் நச்சுக் கழிநீரும் பரவி, மக்கள் நலத்திற்கும் உணவுப் பயிர் விளைவிற்கும் கேடு நேர்ந்துள்ளது.

போக்குவரத்து

மக்கட்டொகை மிகுந்துவிட்டதனால், திருவிழா நாள் களிலும் திருமண மாதங்களிலும் பேரியங்கிகளிலும் தொடர் வண்டிகளிலும் வழிப்போக்கர்க்குப் போதிய இடம் கிடைப் பதில்லை.

வேலையின்மை

மக்கட்பெருக்கத்

தீங்குகளெல்லாவற்றிலும் மிகக் காடியது பலர்க்கு வேலையின்மை. அதனால், தன்மானமுள்ள வரெல்லாம் தனித்தனியாகவுங் குடும்பங் குடும்பமாகவுந் தற்கொலை செய்து கொள்கின்றனர். தன்மானமில்லாதவர் இரப்பெடுத்து இடர்ப்படுகின்றனர். தீயொழுக்கத்திற்குத் துணிந்தவர் ஏமாற்று, களவு, கொள்ளை, வழிப்பறி, கொலை, ஆட்கடத்தம் முதலிய தீவினைகளை மேற்கொள்கின்றனர். பலர் கூடின் காவலரையும் எதிர்த்துத் தாக்குகின்றனர். நூற்றுக் கணக்கினர் சேரின், வன்செயலாற் புரட்சி யுண்டுபண்ணிக் கூட்டுடைமை யாட்சியைத் தோற்றுவிக்க முயல்கின்றனர். இதற்கு மாறானவர், சிறப்பாகப் பெருஞ்செல்வர், அவர் கடுஞ்சினத்திற்கு ஆளாகின்றனர்.

வெளிநாட்டுமக்கள் வெளியேற்றம்

இந்தியர்,சிறப்பாகத் தமிழர், பண்டைநாளில் தொழில் வளர்ச்சியடையாத இலங்கை, கடாரம் (பர்மா) முதலிய கீழைநாடுகட்குச் சென்று, அரும்பாடுபட்டுக் குளம்பி, கொழுந்துத் தோட்ட வேலையும் பயிர்த்தொழிலுஞ் செய்து நாட்டை வளம்படுத்திப் பழங்குடி மக்களை முன்னேற்றியபின், மக்கட்பெருக்கம் பற்றி, அந்நாட்டு மக்கள் தம்மை முன்னேற்றிய வரை நன்றிகெட்டதனமாகத் துரத்தி விட்டனர்.

9. மக்கட்பெருக்க மட்டுப்படுத்தம்

இன்று பார் முழுதும் பரவியிருக்கும் மாபெருங் கேடு மக்கட் பெருக்கமே. விரைந்து கொல்லுங் கொடிய நோயுண்டும் அதைச் சரியாகக் கவனியாதிருக்கும் நோயாளிபோல், ஒன்றிய நாட்டினங்களோ (UN), சீனம் இந்தியா போன்ற மக்கட்பெருக்கம் மிக்க