உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

அல்லாக்கால் வரம்பு மீறுபவரை அடிக்கடி கவனிக்கத் தனி அலுவலர் வேண்டியிருக்கும். அது அரசிற்கு வீண் செலவாகும். மலடாக்கம் குடிசை வாணர்முதல் கோடிச் செல்வர்வரை குல் மத கட்சி தொழில் நிலைமை வேறுபாடின்றி, எல்லார்க்கும் பொதுவாயிருத்தல் வேண்டும். ஓர் எளிய ஏவலன் மனைவியும் இந்தியக் குடியரசுத் தலைவர் மனைவியாரும் இவ்வகையில் ஒன்றே. இந் நடுநிலை தவறின், அரசு அரசாகாது. கூட்டுடை மையரசே யரசென்று கொள்ளற்கிடமாகும்.

இந்தியா பல்வேறு நாடும் இனமும் குலமும் மத மொழி கட்சி தொழில் நிலைமைபற்றிய வகுப்புகளும் கொண்ட உட்கண்ட மாதலால், மலடாக்கத்தை விருப்பத்திற்கு விடின், சில குலம் அல்லது வகுப்பு வரவரச் சிறுகவும், சில குலம் அல்லது வகுப்பு வரவரப் பெருகவும் நேரும். இது நடுநிலைக்கு இழுக்காம்; நாட்டு வளர்ச்சிக்கும் இந்திய ஒன்றிய முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாம். ஆதலால், அணுவளவும் அஞ்சாதும் ஒரு வகுப்பார்க்குங் கடுகளவுங் கண்ணோட்டங் காட்டாதும், அரசு தன் கடமையை நிறைவேற்றல் வேண்டும். அஞ்சுவது கோழைத் தனத்தையும் ஆளுந் தகுதியின்மையையும் ஓரவஞ்சகத்தையுமே காட்டும்.

மதச் சார்பாக எவர் தடை நிகழ்த்தினும் அரசு ஒப்புக் கொள்ளுதல் கூடாது. எல்லா வுயிரினங்களும் இறைவன் படைப்பே. ஆயினும், மாந்தன் தனக்கு வேண்டியவற்றை மட்டும் வைத்துக்கொண்டு வேண்டாதவற்றை விலக்கிவிடுகின்றான். வேண்டியவற்றையும் தன் தேவைப்படி வெவ்வேறளவில் வைத்திருக்கின்றான். தலைமுடி பெண்டிர்க்குப் போல் ஆடவர்க் கும் நீண்டு வளர்வது இயற்கையே, இறைவனேற்பாடே. ஆயினும், ஆடவன் தன் தலைமுடியை விரும்பியவாறெல்லாம் மட்டுப்படுத்திக்கொள்கின்றான். இனி, தாடியும் மீசையும் ஒக்க வளரினும், முன்னதை நீக்கிவிட்டுப் பின்னதைப் பேணுகின் றான். இச் செயல்கள் இறைவன் ஏற்பாட்டிற்கு எதிர்ப்பாகா. இங்ஙனமே, மண்ணுலகில் இறைவனைப் படிநிகர்க்கும் அரசும், காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்றவாறு மக்கட்டொகையை மட்டுப் படுத்துவதும் உண்மையான மதத்திற்கு மாறாகாது.

இனி, இருபிள்ளை யென்னும் வரம்பீட்டிற் பால்பற்றிய கருத்து கலத்தல் கூடாது. இருபிள்ளையும் ஆண்பாலாகவு மிருக்கலாம்; பெண்பாலாகவு மிருக்கலாம்; இருபாலுங் கலந்து மிருக்கலாம். இரண்டும் ஒரே பாலாயிருப்பின், ஏனைப் பாலும்