உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வள்ளுவர் கூட்டுடைமை

61

ஒன்று வேண்டு மென்பது பொருந்தாது. அதற்கு இசையின், சிலர்க்கு முப்பிள்ளையாகி நடுநிலை திறம்பும். மேலும், மூன்றாம் பிள்ளையும் முந்தின பாலாகவேயிருக்கலாம். நம் நாட்டில் இன்றும் "சாண்பிள்ளையானாலும் ஆண் பிள்ளை மாண் பிள்ளை” என்னும் பழமொழிக் கருத்திருப்பதால், முப்பிள்ளை யும் பெண்ணாய்ப் பிறந்த குடும்பம் செல்வஞ் சிறந்திருந்தா லன்றித் தொல்லைப்படத்தான் செய்யும். கோவரசு போய்க் குடியரசு தோன்றியுள்ள இக்காலத்தில், பட்டங் கட்டிப் பாராளப் பிள்ளையில்லையென்று வருந்த வேண்டுவதில்லை. மேலும், பெண் பிள்ளைக்கும் பட்டங் கட்டலாம். பிள்ளை களின் பாலமைப்பு இறைவன் அல்லது இயற்கையேற் பாடேயன்றி மாந்தன் படைப்பன்று. ஆதலால், எப்பாற் பிள்ளை பிறப்பினும் பொந்திகை (திருப்தி) யடைதல் வேண்டும்.

பிள்ளை பெறுவது பெண்ணே யாதலால், மலடாக்கம் பெண்டிர்க்குச் செய்தாலும் போதும்.

கட்டாய மலடாக்கச் சட்டம் ஆட்சிக்கு வருமுன்னரே இரு பிள்ளையும் பல பிள்ளையும் பெற்றிருக்கும் தாய்மார்க் கெல்லாம் உடனே மலடாக்கஞ் செய்துவிடல் வேண்டும்.

இருபிள்ளை பெற்றிருக்கும் இளங்கைம்பெண்டிர்க்கும் மலடாக்கஞ் செய்துவிடல் வேண்டும்.

6. குடும்பக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் (Dept.) தோற்றுவித்தல்

நடுவணரசிலும் நாட்டரசுகளிலும் குடும்பக் கட்டுப் பாட்டுத் திட்டத் திணைக்களம் தோற்றுவித்து ஒரு மந்திரியார் அல்லது அமைச்சர் பொறுப்பில் விடல் வேண்டும்.

7. கல்லுாரிக் கல்விப் பாடத்திட்டத்தில் 'மக்களியல்’(Demography) சேர்த்தல்

8. செய்தியறிவிப்பு வாயில்களில் குடும்பக் கட்டுப்பாட்டை விளக்கல்

செய்தித்தாள், வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி (television), சொற்பொழிவு, துண்டு வெளியீடு முதலிய அறிவிப்பு வாயில்களால் மக்கட்பெருக்கத் தீங்கையும் குடும்பக் கட்டுப் பாட்டுத் திட்டத்தின் நன்மையையும் பொதுமக்கட்கு விளக்கிக் கூறல் வேண்டும். சுவர்களிலும், பலகைகளிலும் சில சொலவங் களை (slogans) மட்டும் எழுதிவைத்தாற் போதாது. நம் நாட்டில் நூற்றுமேனி எழுபதின்மர் இன்றும் தற்குறிகளாய் (கீறற் புள்ளிகளாய்) இருப்பதால், அவர்க்கு அச் சொலவங்கள் பயன்படா.