உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

9. மக்கட் குறைப்புத் திட்ட ஈகியர்க்கு(தியாகிகட்கு)ச் சலுகை காட்டல்

மணவாமை, பிள்ளை பெறாது மலடாக்கஞ் செய்து கொள்கை முதலிய ஈகம் (தியாகம்) செய்யும் ஈகியர்க்கு, அவரவர் விட்டுக் கொடுப்பின் அளவிற்குத் தக்கவாறு வேலையளிப்பு, வீடமைப்பு, கடனீக்கம், வரிக்குறைப்பு, பணவுதவி, இலவச மருத்துவம் முதலிய பல்வேறு வகையில் அரசு சலுகை காட்டுவது, அவர்க்குச் செய்யுங் கைம்மாறும் பிறர் அவரைப் பின்பற்றச் செய்யுந் தூண்டுகோலுமாகும்.

10. மக்கட் பெருக்கத் தீமையும் குடும்பக் கட்டுப்பாட்டு நன்மையும் பற்றிச் சிறந்த புதினம் (novel) எழுதுவார்க்குப் பரிசளிப்பு

11. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றியாக நிறைவேற்றும் ஊராட்சி மன்றத் தலைவரை ஊக்குவிப்பு

12. இளைஞர்க்கும் மணவாத மாணவர்க்கும் காதல் திரைப்படங்களை விலக்கிக் கல்வித் திரைப்படங்களைக் காட்டல்

இத் தடுப்புவழிகளுட் சில மிகக் கடுமையாகத் தோன்ற லாம். ஆயின், அவை கொடியநோய் மருந்து போன்றவை. நோயின் கடுமைக்குத் தக்கவாறு மருந்தின் கடுமையுமிருக்கும். மருந்தின் கடுமை நோக்கி அதை விலக்குபவன் நோயை வளர்த்து மாய்பவனே யாவன். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் சில ஆண்டுகள் கட்டத்தை விளைப்பினும், பின்னர்க் காலமெல் லாம் மக்கள் இன்புற்று வாழ வழிகோலுவது தேற்றம். இன்றேல் அடுத்த நூற்றாண்டில் அடுத்த தலைமுறையில், மக்கள் மாற்றொணாத் துன்புற நேரும். களவுங் கொள்ளையுங் கொலை யும் கட்டிற் கடங்கா; பகையும் பசியும் பிணியும் மட்டிற்கு மிஞ்சும்; காவலருங் கள்வராவர்; அரசும் ஆற்றலறும்; நாடுங் காடாகும். அத்தகைய நிலைமை நேராவாறு, எதிர்கால மக்கள்மீது இரக்கங் கொண்டேனும் இக்கால மக்கள் பண்பாடு மேற்கொள்ள வேண்டும்.