உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.

65

(குறள். 42)

துறவொழுக்கத்தில் உயர்நிலை யடைந்த தாயுமானவரும்,

"கனியேனும் வறியசெங் காயேனும் உதிர்சருகு

கந்தமூ லங்களேனும்

கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப்பு சித்துநான்

கண்மூடி மௌனியாகித்

தனியே யிருப்பதற் கெண்ணினேன்

""

என்று பாடியிருப்பது கவனிக்கத் தக்கது.

(சச்சிதானந்த5)

உழவுத் தொழில் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவை விளைத்தலால், அதற்கு உச்ச முதன்மை கொடுத்து, ஒல்லும் வகையாற் செல்லும் வாயெல்லாம் உதவுதல் வேண்டும்.

நிலவரம்பீட்டினால் எஞ்சிய நிலத்தைச் சிறந்த வுழவர்க்குப் பகிர்ந்து கொடுத்தல், குடியிருக்கும் வீட்டைச் சொந்தமாக்கல், குறைந்த வட்டிக்குக் கடன்கொடுத்து மெல்ல மெல்லப் பெறல், நிலத்தரத்திற்குத் தக்கவாறு வரியிடுதல், விளையாக் காலத்து வரிநீக்கல், நல்விதையும் உரமுங் கருவியும் அடக்கவிலைக்கு விற்றல், நீர்ப்பாசன ஏந்து (வசதி) செய்தல், அதிகாரிகளால் தொல்லை நேராவாறு காத்தல், சிறந்த விளைப் பிற்குப் பரிசளித்தல், பயிர்பச்சைகளை யழிக்குங் காட்டு விலங்கைக் கொல்லுதல், பூச்சி மருந்தடித்தல், விளைத்த கூலங் கட்குத் தகுந்த விலையமைத்தல், உழவர் குடும்ப நுகர்ச்சிக்கு வேண்டிய அளவை வாங்காது விட்டுவிடல், விளையுள்களை விற்பனை நிலையங்கட்கு உய்க்குமாறு போக்குவரத்து வழி களையமைத்தல் முதலியன உழவர்க்கு அரசு செய்யவேண்டிய வுதவிகளாகும்.

உழவரைப் போன்றே உழவுத்தொழிற் கூலியாள்களையும், குடியிருக்கும் வீட்டைச் சொந்தமாக்கல், தகுந்த கூலியேற் படுத்தல், பண்ணையாளரால் தீங்கு நேராவாறு காத்தல், கூலியாளரிடைப் போட்டியைத் தடுத்தல் முதலிய வுதவிகள் செய்து பாதுகாத்தல் வேண்டும்.

எளிய வுழவர்க்கும் பயிர்த்தொழிற் கூலியாளர்க்கும் அரிசிச் சோற்றினும் சிறுகூலவுணவே வலுவு தருமாதலால், புன்செய்களை நன்செயாக மாற்றுவது தவறாகும். மேலும், செல்வர்க்கும் வறியர்க்கும் பொதுவுணவான பயற்றுவகைகளும் புன்செய்களில்தான் விளைக்க முடியும். புன்செய்ப் பயிருக்கு