உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

நிலமில்லையெனின், மக்கட்டொகையைத் தான் குறைத்தல்

வேண்டும்.

பூச்சி மருந்துகளை உழவர்க்கு விற்கும்போது, அவற்றைக் கையாளும் முறையையும் திட்டமாகவும் தெளிவாகவும் தெரிவித்தல் வேண்டும். அல்லாக்கால், மருந்தடித்த கையைச் சவர்க்காரம் (soap) அல்லது சீயக்காய் தேய்த்துக் கழுவாமல் உணவுண்டு சாகவும், நச்சு மருந்துண்ட வயல்மீன்களைச் சமைத்துண்டு மருந்தில்லாக் கொடிய நோய் கொள்ளவும் நேரும்.

தமிழ்நாடு மிகப்பழைய நாடாதலாலும், பல்வேறு வெளிநாட்டு மக்கள் இங்குக் குடியேறியிருப்பதனாலும், மக்கட்டொகை மட்டிற்கு மிஞ்சி, நன்செய்களும் புன்செய்களும் மனைநில அளவாகக் குறுகியுள்ளன. இவற்றை இனிப் புதல்வருக்குப் பாகம் பிரிப்பின், பாத்தியளவாக ஒடுங்கும். அதன்மேல் அவற்றைத் துண்டுபடுத்த முடியாது. ஆதலால், ஒரு செறுவிற்குக் (acre) குறைந்த செய்களை யெல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கூட்டுப் பண்ணைகளாகப் பயிரிடுவதே தக்கதாம்.

நிலமில்லாதவர்க்கெல்லாம் நிலங் கொடுத்தல் என்பது தவறான திட்டம். இஃது அமெரிக்காவும் ஆத்திரேலியாவும் போன்ற குடியேற்ற நாடுகளில்தான் ஓரளவு இயலும். இனிமேற் பிறக்கும் பிள்ளைகட்கு எங்ஙனம் பெற்றோர் தம் சிறு நிலங்களைப் பாகம் பிரித்துக் கொடுக்க முடியாதோ, அங்ஙனமே அரசும் இனிமேல் தோன்றும் உழவர்க்கும் புதிதாக நிலம் ஒதுக்க இயலாது. மேலும், ஆடுமாடு மேய்ச்சலுக்குப் போதிய இடமும் வேண்டும். இதனாலும், மக்கட்டொகை குறைய வேண்டு மென்பது தெளிவாகும்.

பல்வேறு பண்ணைகள்

உணவென்பது, சற்று விரிந்த பொருளில், நீரும் உண்டியும் என இருவகைப்படும். இவற்றுள், முன்னது இயற்கையும் பின்னது பெரும்பாலும் செயற்கையும் ஆகும். உண்டியும், சோறும் குழம்பும் கறியும் என மூவகைப்படும். இனி, கறியும், மரக்கறி புலாற்கறி என இருவகைப்படும். சோற்றுள் கூழுங் கஞ்சியும் களியும் அப்பமும் (ரொட்டியும்) அடங்கும். சோற் றினுங் கறி வலுவுள்ளது. அது குழம்பொடு கூடியுங் கூடாதும் இருக்கும்.