உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

67

புலாற்கறி ஒழுங்காகப் பெறுதற்கு, ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை, பன்றிப்பண்ணை, கோழிப்பண்ணை, வேட்டைக் காடு ஆகியவை தேவை. இவற்றிற்கு ஏராளமாக நிலம் ஒதுக்கப்படல் வேண்டும். ஆதலால், வெற்றுநிலத்தை யெல்லாம் நிலமில்லாதவர்க்குப் பங்கிட்டுக் கொடுத்தல் தகாது. தகுமெனின், அடுத்த தலைமுறையில் புதிதாகத் தோன்றும் மக்களுக்கும், அவர்கட்குப் பின் தலைமுறை தோறும் தோன்றிக் கொண்டேயிருக்கும் மக்களுக்கும் நிலந் தருவார் யார்? எங்கிருந்து தருவார்?

கோழியுள் வாத்து வான்கோழி முதலியனவும் அடங்கும். நாட்டுப்புறத்திலும் நகருள்ளும் நரகலைத் தின்று வாழும் பன்றிகளை வளர்ப்பவரை அரசு தண்டித்தலும், அவ் வளர்ப்பை உடனடியாக நிறுத்துதலும், வேண்டும். வெண்ணிறமான மேனாட்டுப் பன்றியினத்தைக் கிழங்கும் கொட்டையும் இ வளர்க்கும் பண்ணைகளை அரசு ஊக்குவதுடன், தானும் அத் தொழிலை மேற்கொள்ளலாம். காட்டுப் பன்றியாயின் நாட்டுப் பன்றியும் நன்றாம்.

ட்டு

கோழியும் நரகலைத் தின்பதால், துப்புரவாக வளர்க்கும் கோழிப்பண்ணைகளை அரசும் பொதுமக்களும் ஊக்குதல்

வேண்டும்.

இனி, வீட்டு விலங்கு பறவை யிறைச்சியினும் காட்டு விலங்கு பறவையிறைச்சியே சுவை மிக்கிருப்பதால், வேட்டைக் கறி எளிதாய்க் கிடைக்குமாறு வேட்டைக்காடுகளை அமைத்தல் அல்லது புதுப்பித்தல் வேண்டும்.

இறைச்சியாக வுதவும் சில உயிரிகள் (பிராணிகள்) காட்டிலேயே வாழும் இயல்புடையன. "முழுவுடும்பு, முக்காற் காடை, அரைக்கோழி, காலாடு” என்பது ஒப்புநோக்கிய சுவைத் திறம் பற்றிய பழமொழி. உடும்புங் காடையும் காடு வாழுயிரிகள். "நாய்கொண்டாற் பார்ப்பாருந் தின்பர் உடும்பு (பழ. 87).

தமிழ மருத்துவத்தில், சில இறைச்சி வகைகளும் கொடிய நோய்கட்குக் கைகண்ட மருந்தாகக் குறிக்கப்பட்டுள்ளன. எ-டு: எலும்புருக்கும் இருமலுக்குப் பச்சைப்புறா. மூலநோய்க்குப் பன்றி வார். அம்மைநோய்க்கும் பன்றி யிறைச்சி தடுப்பு மருந்தாம்.

ங்ஙனம் வேட்டைக்கறி இருவகையிற் பயன்படுவதால், வேட்டைக்காடுகளைப் போற்றிக் காத்தல் வேண்டும்.