உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

69

"பகன்றைப் புதுமலரன்ன அகன்றுமடி கலிங்கம்” (புறம். 393), இன்றும் நெய்து, தறியாளர் ஆலைகளொடு போட்டியிடலாம்.

'கதர்' என்னும் கைந்நூலாடை, ஆங்கிலேயர் காலத் தேசியப் போராட்டத்தில் ஆலைநெசவிற்கும் ஆங்கிலராட்சிக் கும் எதிர்ப்பாகக் காந்தியடிகள் கையாண்ட அரசியல் வலக் காரக் கருவியாதலால், இக்காலத்திற்கு ஏற்காது. காலத்தின் அருமையை உணரச் செய்யாததும், உலகத்தோடொட்ட வாழுகலை மேற்கொள்ளாததும், அகக்கரண வளர்ச்சியைத் தடுப்பதும், பயன்பாட்டிற் குறைபாடுள்ளதுமான அவ் வாடை நெசவை அரசு ஊக்குதல் கூடாது.

காந்தியடிகளைப் பின்பற்றிக் கைந்நூலாடையே யணிந்த மேனாட் சென்னை மண்டல முதலமைச்சர் பிரகாசனாரும், தம் நூலகப் பொத்தகங்கட்குப் போர்த்தப் பங்கீட்டுக்காலத்தில் 300 இணைமுழம் (yards) ஆலைத்துணியை வாங்கினாரெனின், அவ் வீராடைக்கும் இடைப்பட்ட உரன்வேறுபாட்டையறிய ய

வேறொரு சான்றும் வேண்டுவதில்லை.

கொற்றொழில்

தச்சன் (மரக்கொல்லன்), கம்மி (கற்கொல்லன்), கருமான் (இருப்புக்கொல்லன்), தட்டான் (பொற்கொல்லன்), கன்னான் (செப்புக்கொல்லன்) ஆகிய ஐங்கொல்லரும் அல்லது ஐங்கம் மாளரும், ஓவியமும் பொறிவினையுங் கலந்த தொழிலாள ராவர்.

ஏமப்பூட்டு, துமுக்கி (gun), குண்டுக்குழாய் (cannon), சுழலி (revolver) முதலிய கருவிகளும் படைக்கலங்களும் செய்யக்கூடிய கொல்லர் இன்றும் நம்மிடையுள்ளனர். அவரைப் பொறி வினையிற் பயிற்றினால், நாளடைவில் மேலையர் போலப் புதுநாகரிகக் கருவிகளையெல்லாம் செய்யக்கூடிய ஆற்றலராவர். பொற்பணியில் தலைசிறந்தவர் பண்டைத் தமிழப் பொற்

கொல்லர்.

மத்தக மணியொடு வயிரங் கட்டிய

பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூற் சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம் பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கிக் கோப்பெருந் தேவிக் கல்லதை யிச்சிலம்பு யாப்புற வில்லை யென

22

நுண்வினை சிறந்திருந்தது கண்ணகி சிலம்பு.

(சிலப். 16:117-22)