உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

வாழ்நாள் நீடிக்குமாறு மக்கட்கு இன்பந்தருவனவற்றுள் அழகும் ஒன்றாகும். மக்களழகை இயற்கையாக மிகுப்பது பொன்னிறமும் வெண்ணிறமும்; செயற்கையாக மிகுப்பன ஆடையணிகள். ஆடவர்க்கு ஆண்மையும் பெண்டிர்க்கு அழகும் பெரும்பாலும் சிறப்பியல்புகள். பெண்டிர் மெல்லியலா ராதலால் (weaker sex), ஆடவரை மயக்கவும் வயக்கவும் வல்ல அழகை அவர்க்கு அரணாக இறைவன் அமைத்திருக்கின்றான். அதனால், பெண்டிர்க்கு நல்லார்(fair sex) என்றும் மாதர் என்றும் பெயர். (மா = அழகு. மாது = அழகுடையவள்.) அழகுடைமையே பெண் என்ற பெயர்க்கும் கரணியமாகும். (பெட்டல் விரும்புதல். பெள் பெண் = விரும்பப்படுபவள்.)

=

=

குளிர்நாட்டார் வெள்ளையர்; வெப்பநாட்டார் கருப்பர்; டை நிகர் நாட்டார் செம்மையர் அல்லது பொன்மையர். வெண்மையும் பொன்மையும் செம்மையும் அழகையும், கருமை அழகின்மையையும், மிகுத்துக் காட்டும். எல்லாப் பெண்டிரும் அழகியரல்லர். பெண்டிரை நல்லார் அல்லது மாதர் என்றது பெரும்பான்மை பற்றியே. இயற்கையழகும் நன்னிறமும் இல்லாப் பெண்டிர்க் கெல்லாம், ஆடையணிச் செயற்கையழகு இன்றிய மையாததெனினும் பொருந்தும். தென்னிந்தியப் பெண்டிருள், மழைவளம் மிக்க மலையாள நாட்டு மகளிர் தவிர ஏனைய ரெல்லாம் பொதுவாக நிறங்குன்றியவரே. அவருள்ளும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பெரும்பாலும் சிறிதும் பெரிதும் கரியராவர். அழகில்லாப் பெண்டிர்க்கு அழகூட்டுவதற்கு, அழகிற்கு இருப்பிடமான முகத்தை யணிசெய்வதும், இரவும் பகலும் என்றும் அழியாது உடம்பின் மேலிருப்பதுமான அணியே, ஆடையினுஞ் சிறந்ததாகும். ஆதலால், தங்கக் கட்டுப்பாட்டினால் நடுவணரசு தொகுத்துள்ள குன்றுபோன்ற பொற்குவையினின்று, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒவ்வோர் ஏழைப்பெண்ணிற்கும், காதணியும் கழுத்தணியுமாக மும்மூன்று சேரை (pound) நல்கின், மிக நன்றாம். வெண்ணிற மான மேலைநாட்டுப் பெண்டிர்க்கு, அணி தேவையில்லை; ஆடையே போதும். ஆயின், கருநிறமான இந்தியப் பெண்டிர்க்கு அணி மிகமிகத் தேவை. இதன் உண்மையைக் காட்சியளவே காட்டும். ஆதலால், இதை மறுப்பவர் எப்பாலரேனும் பிறரால் ஏவுண்டவரே யாவர்.

பண்டை நல்லிசைப் புலவரெல்லாம் பெண்டிரைப் பெரும்பாலும் அணியிழை, ஆயிழை, சேயிழை, திருத்திழை யென அணிப்பெயராலேயே குறித்திருப்பதையும், தெய்வப்