உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

71

புலமைத் திருவள்ளுவரும் கனங்குழை மாதர், ஒண்டொடி, மாணிழை, இலங்கிழை என்னுஞ் சொற்களை ஆண்டிருப் பதையும் நோக்குக.

ஏழைப் பெண்டிர்க்குப் பொன்னளிப்பதைச் சிலர் நெறிதிறம்பியதாகக் கருதலாம். நிலம் மிக்கவரிடமிருந்து பெற்ற மிகை நிலத்தை நிலமில்லாதவர்க்குப் பகிர்ந்து கொடுப்பது போன்றதே பொலம்(பொன்) மிக்கவரிடமிருந்து பெற்ற மிகைப் பொலத்தைப் பொலமில்லாத பெண்டிர்க்குப் கொடுப்பதும்.

பகிர்ந்து

இனி, தங்கக் கட்டுப்பாட்டினால் பொற்கொல்லர் பலர் தம் தொழிலை யிழந்திருப்பதாகத் தெரிகின்றது. மக்கட்டொகை பெருகப் பெருகத் தொழிலும் பல்க வேண்டும். இதற்கு மாறாக இருந்த தொழிலும் நீங்கிவிடுவது, பொருளாட்சி நெறி முறைக்கும் கூட்டுடைமைக் கொள்கைக்கும் முற்றும் முர ணாகும். ஆதலால், பொற்கொல்லர் தாம் இழந்த தொழிலை மீளப்பெறுமளவு தங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்தல் வேண்டும்.

வீடு, நிலம், பணம், நகை, தட்டுமுட்டு, ஊர்தி முதலிய னவாகச் செல்வம் பலவகைப்படும். இக்காலத்தில் ஒரு சிறு குடும்பம் வதியக்கூடிய நாலறையும் அடுக்களையும் சலக்கப் புரையும் (latrine) கொண்டே வீடே, அரையிலக்கம் உருபா பெறுகின்றது. அதற்குமேல் நிலம் பணம் முதலியனவு மிருப்பின், நாலைந்திலக்கத்திற்கு மேலும் ஆகிவிடும். மேனாட்டினின்று பொற்காசு வரத்தில்லாத இக்காலத்திற் பொற்கொல்லர் முதலீடெல்லாம் நகையே. ஆதலால் ஒரு பொற்கொல்லன் குடும்பம் பிழைக்குமளவு வருவாய் வரத்தக்க தொழில் ஒழுங் காய் நடக்குமாறு, அவன் நகை முதலீட்டு வரம்பை உயர்த்துதல் வேண்டும்.

தோட்டி வேலை

தெருக்கூட்டுதல், குப்பை

வாரிக்

தோட்டிகட்குத் கொண்டு போய்க் கொட்டுதல், விளக்கேற்றுதல், பறையறைந்து விளம்பரஞ் செய்தல் ஆகிய துப்புரவான பணிகளே யிருத்தல் வேண்டும். வீடு தொறும் சலக்கப்புரையில் நரகலை வாருவதும், அதைப் பலர்முன் முறத்திற் சுமந்து கொண்டுபோய்ப் பறைகளிற் கொட்டுவதும், அப் பறைகளைச் சரக்கியங்கிகளில் (lorries) ஏற்றிக்கொண்டு போய்க் குழாய் நீரடிப்பதுமான அருவருப்பான