உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

வேலைகளை அடியோடு நீக்குதல் வேண்டும். இன்றேல், குமுகாயத்(social) துறையில் அவர் ஒருகாலும் முன்னேற முடியாது. அவரைப் பொறுத்த வரையில் தீண்டாமையுந் தொடரும். மாந்தன் நரகலை மாந்தனே வாரிச் சுமக்கச் செய்வது, நாகரிக மாந்தனுக்கும் நாகரிக அரசிற்கும் கடுகளவுந் தகாது. ஒவ்வொரு வீட்டிலும் அடிப்புச் (flush-out) சலக்கப்புரையே யன்றி, எடுப்புச் சலக்கப்புரை யிருத்தல் கூடாது.

குடிசைத் தொழில்கள்

தொழிற்சாலைகளில் அமர்த்தம் பெறாத தொழிலாளி களெல்லாம், தத்தம் குடிசையிலேயே தமக்குத் தெரிந்தனவும் மக்கட்குப் பயன்படுவனவும் உடனுடன் பணம் பெறுவனவு மான தொழில்களைச் செய்யுமாறு, அரசு அவர்கள் குடிசை களை அவர்கட்குச் சொந்தமாக்கி, அவரவர் தொழிலுக் கேற்ற முதலீடுஞ் செய்தல் வேண்டும்.

தொழிற்சாலையிடம்

தொழிற்சாலைகள், மக்கள் குடியிருப்பிற்கும் கல்விநிலை யங்கட்கும் விளைநிலங்கட்கும் குறைந்தது ஒருகல் தொலைவிற் கப்பால் இருத்தல் வேண்டும். அல்லாக்கால், அவற்றினின்று வெளிவரும் தீநீராலும் நச்சுப் புகையாலும் நாற்றக்காற்றாலும் மக்கள் நலங்கெடும்; மரஞ் செடி கொடிகள் படும்; பயிர் பச்சைகள் விளையா; ஆறு, ஏரி, கிணறு முதலிய நன்னீர் நிலைகளெல்லாம் உவர்நீராக மாறிவிடும். தோற்பதனீட்டுச் சாலைகள் ஊரருகிலிருப்பவற்றையும் அளவிற்கு மிஞ்சின வற்றையும் உடனே அகற்றிவிடல் வேண்டும். ஆலைக் கழிவு நீரைத் தூய்மைப் படுத்தலையும் மேற்கொள்ள வேண்டும்.

தொழிலாளர் ஒன்றியம் (Labour Union)

ஒரு தொழிலுக்கு ஒரே தொழிலாளர் ஒன்றியம் இருத்தல் வேண்டும். அதுவுங் கட்சிச் சார்பற்றதாயிருத்தல் வேண்டும்.

தொழிலாளர் தொழிற்சாலை யுரிமையாளரையும் மேலாண்மையையும் நன்கு மதித்து, அவர்க்கு அடங்கி நடத்தல் வேண்டும். நன்றியறிவு காட்டுதலும் நன்று.

வாழ்க்கைக்குப் போதுமான மாதச் சம்பளமும் முறைப் படி யுரிய மாதப் படிகளும் (allowances), ஆண்டிறுதி நன்னரும் (Bonus), தொழிலாளர் கேட்கலாம். ஆயின், நிறுவனத்திற்கு இழப்புண்டாக்கி அதைச் சாத்திவிடும் அளவிற்குக் கேட்டல்