உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

73

கூடாது. சிறு தொழிற் சாலைகளைச் செல்வவளம் மிக்க பெருந் தொழிற் சாலைகளுடன் ஒப்பு நோக்குதலுந்தகாது. கூட்டு டைமை நாடாயின், தொழிற்சாலைகளெல்லாம் அரசின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கும். அப்போது ஓரியலான சம்பளத் திட்டம் கையாளப்படும். தனியுடைமை நாடுகளில், நிறுவனத் தின் செல்வநிலைக்குத் தக்கபடி, தொழிலாளரும் ஒத்துப் போதல் வேண்டும்.

தக்க கரணியம் இருந்தாலன்றி வேலைநிறுத்தம் செய்தல் கூடாது. மேலாண்மையொடு ஏதேனும் பிணக்கு நேரின், முதற் கண் தொழிற்றுறை அலுவலரிடத்தும், பின்னர்த் தொழிற் றுறையமைச்சரிடத்தும் முறையிடல் வேண்டும். அவ்விருவ ராலும் தீராவிடின், பின்னர்ப் பொதுமக்களிடம் முறையிடுதல் போல் முந்நாட்குமுன் தெரிவித்து, அமைதியாகவும் வன்செய லின்றியும் தனிப்பட்டவருடைமைக்கும் அரசுடைமைக்குஞ் சேதம் விளைக்காதும் ஊர்வலமுங் கூட்டமும் நடத்திவரல் வேண்டும். சிலநாட்குள் ஏதேனும் ஓர் ஒழுங்கு ஆகத்தான் செய்யும்.

சாலைப்போக்குவரத்திற்கும் இருப்புப் பாதைக்கும் உரிய தொழிலாளர் ஒன்றியங்களாயின், கல்விச்சாலைகள் பணி செய் யும் நாட்களில், சிறப்பாகத் தேர்வுநாட்களில், வேலை நிறுத்தம் செய்தல் கூடாது. வேலைநிறுத்தக் கிளர்ச்சி வெற்றி பெறப் பொதுமக்கள் துணையுங் கண்ணோட்டமும் இன்றியமையாத தாதலின், போக்கு வரத்தைத் தடுத்தும் இயங்கும் ஊர்திகள்மேற் கல்லெறிந்தும் அவர் வெறுப்பையும் பகைமையையும் தேடிக் கொள்ளல் கூடாது.

அரசுடைமைக்குச் சேதம் விளைப்பின், அதற்கு அரசு பொது மக்கள் வரிப்பணத்திலிருந்துதான் ஈடு செய்து கொள் ளும். அது கிளர்ச்சியாளரையும் ஓரளவு தாக்கும். ஆதலால், அரசிற்கு வீணாகத் தொல்லையையும் எரிச்சலையும், பொது மக்கட்கு வெறுப்பையும் இழப்பையும், வன்செயலால் உண்டு பண்ணுவது, அறியாமையையும் அநாகரிகத்தையுமே காட்டும். பொறிவினை

நீராவி வலிமையும்

மின்னாற்றலுங் கண்டுபிடிக்கப் பட்டபின், மேனாடுகளிலெல்லாம் கைத்தொழில்கள் பொறித் தொழில்களாக மாறிவிட்டன. சப்பான், சீனம் முதலிய கீழ்நாடு களும் அவற்றைப் பின்பற்றிவிட்டன. இந்தியாவும் அத்தொழின்