உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

முறையை மேற்கொண்டால்தான் முன்னேறவும் இனிதுவாழ வும் முடியும்.ஆயின், மக்கட்பெருக்கமும் வறுமையும் இதற்குப் பெருந்தடையாயுள்ளன. ஆதலால், சிற்றூர் வதிவையும் எளிய வாழ்க்கையையும் கைவினையையுமே காந்தியடிகள் போற்றி யுரைத்தார். இதன் தவற்றையுணர்ந்த சவகர்லால் நேரு, “மாந்தனின் மகமையும் வெற்றியுமாயிருக்கின்ற அச் செய்தியே, பழிக்கவும் தளர்ச்சியூட்டவும் படுகின்றது. மனத்தை வருத்தி அதன் வளர்ச்சியைத் தடுக்கும் ஓர் இயற்கைச் சுற்றுச்சார்பு விரும்பத்தக்கதாகக் கருதப்படுகின்றது. இந்நாளை நாகரிகம் தீங்கு நிறைந்தது. ஆயின், அதே சமையத்தில், அது நன்மை நிறைந்ததாகவும் அத் தீங்குகளையெல்லாம் நீக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்ததாகவும் உள்ளது. அதை வேரறுப்பது, அவ்வாற்றலை அதினின்று அகற்றுவதும் மந்தமும் உயிரற்றதும் இரங்கத் தக்கதுமான ஒரு நிலைமைக்குத் திரும்புவதும் ஆகும்" என்று கடிந்தெழுதினார். அதையே அவர் மகளாரான இந்திராகாந்தி யம்மையாரும் இன்று கடைப்பிடிக்கின்றார்.

பொறிவினைத் தொழில் இறைவனருளால் மாந்தனுக்கு ஏற்பட்ட அறிவுவளர்ச்சியின் பயனே. இதைப் புறக்கணிப்பது, மாந்தனை அஃறிணைப்படுத்துவதும் இறைவனை நேரல்லா வழியிற் பழிப்பதுமாகும். விரைவு, அழகு, உறுதி, நுட்பம், ஏமம் (பாதுகாப்பு), செயலெளிமை, அறிவுவளர்ச்சி, முன்னேற்றம், பணியாளர் சின்மை முதலிய பொறிவினைப் பயன்களைக் கைவினையிற் காணமுடியாது.

கைக்கடிகாரம், ஒளிப்படம் (photograph), திரைப்படம், ஒலிப்பதிவான், தொலைவரியடிப்பான், தொலைபேசி முதலிய பல்வேறு செய்பொருள்களும் கருவிகளும் பொறிகளும், இயங்கி (motorcar), வானூர்தி முதலிய பல்வகை யூர்திகளும், கைவினையிற் செய்ய முடியாது.

பல்வேறு வடிவிலும் அளவிலும் அழகும் தெளிவுமுள்ள முத்துப்போன்ற எழுத்துகளை ஒழுங்கான வரிசைகளாக அடுக்கிய பதினாறு பக்கப் படிவங்களை, ஒரு மணி நேரத்தில் ஆ யிரக்கணக்காக அடிக்கும் அச்சுப்பொறிகளில்லாவிடின், ஆயிரக்கணக்கான ஓவிய எழுத்தாளர் கூடி ஆண்டுக்கணக்காக எழுதினும், அச்சுப் பொத்தகம் போன்றதொன்று ஆக்க வொண்ணுமோ?

பொறிவினையைத் தூற்றிக் கைவினையைப் போற்றுபவர், ஏன் இயங்கிகளிலும் தொடர்வண்டிகளிலும் வானூர்திகளிலும்