உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

75

வழிச்செல்ல வேண்டும்? திருநெல்வேலியிலிருந்து தில்லிக்கு மாட்டுவண்டியிலுங் குதிரைவண்டியிலுஞ் சென்றால், ஆயிரக் கணக்கான ஏழை மக்கள் பிழைப்பார்களே! பம்பாயிலிருந்து இலண்டனுக்குப் பரிசலிலும் படகிலுஞ் சென்றால், பல்லாயிரக் கணக்கான பரவருங் கரையாரும் பிழைக்கலாமே! எல்லா வகையிலும் பொறிகளைப் பயன்படுத்திக் கொண்டு அவற்றைப் பழிப்பவர், ஏமாற்றுக்காரருள் முதல் வகுப்பினரே யாவர். பொறிவினைக்கு மக்கட் பெருக்கந் தடையெனின், மக்கட் குறைப்பேயன்றிப் பொறிவினைக் குறைப்பு மருந்தாகாது. உலகிற் பொறிவினையில்லாவிடின், இந்தியாவிற் சுரங்கவெள்ளம் போன்ற ஓர் இயற்கை யிடுக்கண் நேரின், அமெரிக்காவினின்றும் சியாவினின்றும் ஒரே நாளில் உதவிப்பொறிகள்

வியலுமோ?

வர

1853வரை சப்பான் (Japan) மேனாடுகளொடு முற்றுந் தொடர்பற்றிருந்தது. அவ்வாண்டு பெரி (Perri) என்னும் கலத் துறை அதிகாரி, அமெரிக்க ஒன்றிய நாடுகளின் (U.S.A.) அரசால் ஒரு சிறு கலப்படையுடன் சப்பானுக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு ஒன்றிய நாடுகள் சப்பானொடு ஓர் உடன் படிக்கை செய்துகொண்டன. அதனால் இரு நாடுகட்கும் உறவு ஏற்பட்டது. சப்பானியர் அவ்வுறவைப் பயன்படுத்திக் கொண்டு பொறிவினைப் பயிற்சி பெற்றுத் தேர்ந்தனர். அதன் விளைவாக, சப்பானும் இன்று ஒரு வல்லரசாக விளங்குகின்றது. உலகில் விரைவுமிக்க மின்தொடர் வண்டியும் அங்கு இயங்குகின்றது. சப்பானியர் போன்று, இந்தியரும் பொறியாக்கப் பயிற்சி பெறின், இந்தியா விரைந்து ஒரு வல்லரசாகி விடும்.

கோவைப் புதுப்புனைவாளர் (inventor) கோ. துரைச்சாமி நாயக்கரை (G.D. நாயுடு) நடுவணரசும் ஊக்கவில்லை: தமிழ் நாடும் போற்றவில்லை, தம் வயிற்றெரிச்சலால் தம் புதுப் புனைவுப் பொறிகளைச் சென்னையிற் கொண்டுவந்து சுட்டெ ரித்தார். அரசு ஊக்கியிருப்பின், அவரும் உலகுபோற்றும் ஓர் எடிசனாகியிருப்பார். அதனால், தமிழ்நாடும் நடுவணரசும் மட்டுமன்றி உலகும் பெரும்பயன் பெற்றிருக்கும். அதிகாரிகளின் குலவெறியும் கட்சி வெறியும் தன்னலமும் செருக்கும் அழுக் காறும் அவரைக் கெடுத்தன.

சுரண்டையைச் சேர்ந்த ஏகாம்பரம் என்னுந் தமிழர், எண்கதிர் ஒருங்கேயியங்கக்கூடிய அம்பர்ச்சருக்கா என்னும் (தம் பெயர் கொண்ட) இராட்டையைப் புதுப்புனைந்தார்.