உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

(6) சீன -திபேத்தம் (Sino -Tibetan) என்னுங் குடும்பம் சீனதேசத் திலும் திபேத்து நாட்டிலும் பேசப்படும் மொழிகளைக் கொண்டதாகும். இது திபேத்தோ -பர்மியம், சீனம் என்னும் இரு கிளைகளை யுடையது.

(7) தென்மேற்குச் சீனத்திலும் ஐனான் தீவிலும் தா-நாட்டிலும் இந்தோ – சீனத்திலும் பர்மாவின் ஒரு பகுதியிலும் பேசப்படும். மொழித் தொகுதி கதா- (Kadai) என்னும் குடும்பமாகும். இது மலையோ -பாலினீ சியத்திற்கு இனமான தாகவும் இருக்கலாம்.

(8) வடநடு ஐரோப்பாவிலும் கீழை ஐரோப்பாவிலும் சின்ன ஆசி யாவிலும் வடஆசியாவிலும் பேசப்படும் (ஆரியமும் சேமியமும் அல் லாத) Altaic) GOT ILD பல மொழிகள், ஊரல் ஆலத்தேயம் (Ural குடும்பத்தைச் சேர்ந்தனவாகும். இக் குடும்பத்தைத் துரேனியம் அல்லது சித்தியம் என்பர் கால்டுவெலார்.

இக் குடும்பம் ஊரலியம் (Uralian), ஆலத்தேயம் என்னும் இரு கிளைகளைக் கொண்டது.

சாமோயெதம், அங்கேரியம், பின்னியம், இலாப்பியம், எசுத்தோனி யம் என்பன ஊரலியத்தையும்; துருக்கியம், மங்கோலியம், மஞ்சு என்பன ஆலத்தேயத்தையும் சேர்ந்தனவாகும்.

(9) காக்கேசிய மலைத்தொடரையடுத்து வழங்கும் பல மொழிகள், வடகாக்கேசியம் என்றும் தென்காக்கேசியம் என்றும் இரு குடும்பங்களாகக் பகுக்கப்பட்டுள்ளன.

(10) ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும், ஐரோப்பியர் குடியேறி யுள்ள வடதென் அமெரிக்காவிலும் ஆத்திரேலியாவிலும் ஆப்பிரிக்கப் பகுதிகளிலும், பேசப்படும் மொழிகள் இந்தோ -ஐரோப்பியம் என்றும் இந்தோ - செருமானியம் என்றும் ஆரியம் என்றும் சொல்லப்பெறும் மாபெ ருங் குடும்பத்தைச் சேர்ந்தனவாகும்.

இக் குடும்பமே எல்லா மொழிக் குடும்பத்துள்ளும் பெரிதாம். இது மேலையது, நடுவணது, கீழையது என முறையே ஒன்றினொன்று சிறிய முக்கவைகளை யுடையது.

செலத்தியம் (Celtic), இத்தாலியம் (இலத்தீனம்), தியூத்தானியம் (செருமானியம்), தொக்காரியம், எல்லெனியம் (கிரேக்கம்), இலெத்தியம் என்பன மேலையாரியத்தையும்; பாலத்தியம் (Baltic), சிலாவோனியம்,