உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

83

இது கீழையது, மேலையது (இந்தோனசியம்) என இருபாற்பட்டது. கீழையது மைக்கரோனீசியம், பாலினீசியம், மெலனீசியம் என்னும் முப் பிரிவு கொண்டது. மேலையது, கீழையிந்தியத் தீவுகளிற் (East Indies) பேசப்படுவது.

(4) தென்னிந்தியாவிலும் நடுவிந்தியாவிலும் வடஇந்தியாவின் கீழைக் கோடியிலும் மேலைக்கோடியிலும் பேசப்படும் மொழிகள், தென் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை மேலை வழக்கில் திரவிடம் (Dravidian) எனப்படும். இற்றை யாரா-ச்சியால், ஆரியக்கலப்பை நீக்க முடியாத தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகளே திரவிடம் என்றும், அதை நீக்கமுடியும் தமிழ் அவற்றினின்று பிரிந்து தனித்து நிற்பதென்றும், வேறு படுத்தப்பட்டுள்ளன. தென்மொழிக் குடும்பத்தைச் தென்னிந்தியம் அல்லது தமிழியம் என்றும் கூறலாம்.

தென்னிந்தியக் குடும்பத்தை முதன்முதல் தெளிவாகப் பிரித்துக் காட்டி. அதன் மொழிகளைப் பதின்மூன்றாக் கணக்கிட்டவர் கால்டு வெலார். அக் கணக்கைப் பரோவும் எமெனோவும் விரிவுபடுத்தி இன்று பத் தொன்பதாகக் காட்டியுள்ளனர்.

(5) தென்கிழக்காசியாவிலும் நடுவிந்தியாவின் மலைகளிலும் அசாமி லும் கடாரம் எனப்படும் பர்மாவின் வடகோடி தென்கோடிகளிலும் நக்க வாரத் தீவுகளிலும் (Nicobar Islands) பேசப்படும் பல மொழிகள், ஆத் திரோ ஆசியம் ( Austro -Asiatic) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தன வாகும். இக் குடும்பம் மான் -குமேர் (Mon - Khmer) என்றும் பெயர்பெறும்.

நடுவிந்தியாவிற் பேசப்படும் இக் குடும்ப முண்டா அல்லது கோலா ரிய மொழிகள் கெர்வாரீ, கூர்க்கூ, கறியா, சுலாங், சவரா' சவரா' கடபா என ஆறென்றும், அவற்றுள் முதலது சந்தாலீ, முண்டாரீ, பூமிசு, பிரார், கோடா, (Ho), தூரீ, அசுரீ, அகரியா, கொர்வா எனப் பத்து நடைமொழிகளைக் கொண்டதென்றும் கிரையர்சன் கூறுவர்.

இவற்றுள் கடபா என்பது ஒரு திரவிடமொழி என்னுஞ் செ-தி வெளி யாகியுள்ளது.

முண்டா மொழிகளை ஒரு தனிச் சிறு குடும்பமாகப் பிரித்துக் காட்டி யவர் மாக்கசு முல்லராவர்.