உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

இவ் வகரமுதலியை அடிப்படையாகக் கொண்டதினாலேயே, பர். பரோவும் பர். எமெனோவும் தொகுத்த திரவிட ஒப்பியல் அகரமுதலி பல் வகையிலும் வழுப்பட்டுள்ளதென்க. அது ஒப்பியல் அகரமுதலியாகவே யிருப்பினும், சொற்பிறப்பியல் (Etymological) அகரமுதலியென்று பெயர் பெற்றிருப்பதே அதன் அடிப்படைத் தவற்றைக் காட்டும்.

ஒரு மொழியின் இலக்கியத்தை அயலார் கற்றுத் தேர்ச்சி பெறலாம். ஆயின், ஒரு மொழிப் பேச்சில் அங்ஙனம் தேர்ச்சிபெற முடியாது. ஒவ் வொரு மொழிக்கும் சிறப்பான சொன்மரபுகளும் வழக்காறுகளும் உள. அவற்றை அம் மொழி நாட்டார் அறிவிக்கவே அறியமுடியும். அவற்றை அந் நாட்டார்போல் இயற்கையாக ஆள ஓரிரு தலைமுறையேனும் அந் நாட்டில் வதிந்து அவரொடு இரண்டறக் கலந்து பழகியிருக்க வேண்டும். பிராமணர் இன்னும் தமிழரொடு நெருங்கிப் பழகாமையால் தமிழைச் செவ்வையா- அறியவில்லை. அதோடு தமிழை வெறுத்து வடசொற் களைப் புகுத்தித் தமிழ்ச்சொற்களை வழக்கு வீழ்த்தவுஞ் செ-கின்றனர்.

9. உலக மொழிக் குடும்பங்கள்

உலகமெங்கும், சிறப்பாக ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இந்தியாவிலும், பல்வேறு மொழியாரா-ச்சியாளரும் மொழிநூலாசிரியரும், தமித்தும் இணைந்தும் கூடியும், பல்வேறு மொழியிலக்கணங்களையும் அகரமுதலிகளையும் துணைக்கொண்டும் தாமாகப் பல

மொழிகளைக் கற்றும், கடந்த முந்நூற்றாண்டுகளாகச் செ-துவந்த ஆரா-ச்சியின் பயனாக, பெரும்பாலும் உலகமொழிகளெல்லாம் சிறியவும் பெரியவுமான பல்வேறு மொழிக்குடும் பங்களாகப் பாகுபாடு செ-யப்பட்டுள்ளன. அவையாவன:

(1) ஆத்திரேலியாக் கண்டத்தின் பழங்குடி’ மக்கள் பேசும் மொழிகளெல்லாம் சேர்ந்து ஆத்திரேலியம் என்னும் குடும்ப

மாகும்.

(2) நியூகினியாவிலும்

அதையடுத்த தீவுகளிலும் பேசப்படும்

பாப்புவன் (Popuan) என்னும் குடும்பவுறவு இன்னும் அறியப் பெறவில்லை.

(3) நியூகினியா வொழிந்த மலையாத் தீவுக்கணத்தினின்று, மேற்கே மடகாசுக்கர்த் தீவுவரையும் பேசப்படும் மொழிகள் மலையோ – பாலினீயம் என்னும் பெருங்குடும்பமாகும்.