உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

கண

1961- பரோவும் எமெனோவும் இணைந்து தொகுத்த திரவிடச் சொற் பிறப்பியல் அகரமுதலி.

81

இங்ஙனமே ஏனை யிந்தியமொழிகட்கும் பிறநாட்டு மொழிகட்கும், இலக் நூல்களும் அகரமுதலிகளும் வெவ்வேறு ஆசிரியரால் இயற்

றப்பட்டன.

ஒரு மொழிக்கே சிறப்பும் உலகப்பொதுவுமான எழுத்தொலி யிலக் கணங்களும் (Phonetic works) ஒன்றன்பின் ஒன்றா-த் தோன்றின.

ஆங்கிலத்திற்போன்றே செருமனிய பிரெஞ்சுமொழிகளிலும், மொழி நூல்களும் மொழியாரா-ச்சிக் கட்டுரைகளும் பன்மொழி யிலக்கணங் களும் அகரமுதலிகளும் ஏராளமாக எழுந்தன. ஆயின், மேலையர், பொது வாக, சமற் கிருதத்திற்கே அளவிறந்த முதன்மை கொடுத்து அதனையே சிறப்பாக ஆ-ந்து வந்தனர்.

எல்லா மொழியகரமுதலிகளுள்ளும் மிகமிகக்கேடானதும் உண்மைக்கு மாறானதும் வழுமலிந்ததும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகர முதலியே. அது தமிழ்ப்பகைவரான தமிழ்ப்பகைவரான பிராமணரால் திரு. பிராமணரால் திரு. வையாபுரிப் பிள்ளையின் துணைகொண்டு தமிழைக் கெடுத்தற்கே தொகுக்கப்பட்டது. அதன் எண்பெருங் குற்றங்களாவன:

(1) ஆயிரக்கணக்கான தென்சொல் இன்மை.

(2) ஆயிரக்கணக்கான வேண்டா அயற்சொல் உண்மை.

(3) சொற்பொருளெல்லாங் கூறப்படாமை.

(4) கூறப்பட்டுள்ள பல பொருள்களின் வழுவியன்மை.

(5) அடிப்படைத் தென்சொற்களுட் பெரும்பாலனவற்றிற்கு ஆரிய மூலங் குறிக்கப்பட்டுள்ளமை.

(6) வேறுபட்ட பல சொற்கள் ஒரே மூலத்தனவாகக் காட்டப்பட் டுள்ளமை.

(7) சொற்களின் ஒலிமுறை வரிபெயர்ப்பில் வரிபெயர்ப்பில் (Transliteration) உண்மைக்கு மாறாயுள்ளமை.

(8) இயற்சொல்லின்கீழ்த் திரிசொற்களும் பிறந்தையின் (Genus) கீழ் னங்களும் (Species) காட்டப்பெறாது, எல்லாம் ஒரே அளவான எழுத்து வடிவில் அகரவரிசையா - அமைக்கப் பட்டுள்ளமை.